உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசியில் தாயை கொன்ற மகன்

சிவகாசியில் தாயை கொன்ற மகன்

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தாயார் மரியரத்தினத்தை 70, குடும்ப தகராறில் மகன் மரிய சுந்தர்ராஜ் 40, கொலை செய்தார்.சிவகாசி முருகன்காலனியைச் சேர்ந்த செல்லப்பா மனைவி மரியரத்தினம். இவருக்கு மூன்று மகன்கள். இளைய மகன் மரிய சுந்தர்ராஜ் அச்சகத்தில் கூலி வேலை செய்கிறார். குடும்பத் தகராறில் இவரது மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.மரியசுந்தர்ராஜூக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் தாயாரை மரிய சுந்தரம் இரும்பு கம்பியால் தாக்கினார். காயமடைந்த மரியரத்தினம் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மரியசுந்தர்ராஜ் கதவைப் பூட்டி வீட்டிற்குள் பதுங்கியிருந்தார். போலீசார் வீட்டு கதவை உடைத்த போது மரியசுந்தர்ராஜ் காயமடைந்தார். அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்