உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன்னை உணரும் நிலை தான் சிவனை உணரும் நிலை

தன்னை உணரும் நிலை தான் சிவனை உணரும் நிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தன்னை உணரும் நிலை தான், சிவனை உணரும் நிலை,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி, அரங்க மகாதேவன் பேசினார். எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த, சைவசித்தாந்த மாநாட்டில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசியதாவது:இந்த உலகம், 360 டிகிரி எனும் பாகைகள் கொண்டது. இதை, 12 கூறுகளாகவும், 3.87 டிகிரியாகவும், 27 நட்சத்திரங்களாகவும் கணக்கிட்டு, அணுக்கதிர் தத்ததுவத்தைக் கூறி, அதுவே, இந்த உலகத்தை இயக்கும் என்று உரைத்த விஞ்ஞானமே சைவ சமயம். அணுக்கதிர் தத்துவத்தின் ஆற்றலை உணர்த்துவது தான் சிதம்பரம் நடராஜரின் நடனம்.

தன்னை அறிந்தால்

தமிழ் என்பது வெறும் மொழியல்ல; அது சிவம். அந்த சிவனின் ஆற்றலையும், பராக்கிரமங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதுடன், அவரின் உன்னதத்தையும் காட்டி, ஓங்கி உயர்ந்து நிற்கிறது தமிழ் மொழி. தமிழையும், சிவத்தையும் உணரச் செய்பவையே திருமுறைகள். அதனால் தான், 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே' என்றார் திருமூலர். அண்ட சராச்சரங்களையும் தன்னுள் அடக்கியது சிவம். அந்த சிவத்தை உரைக்க, உலகத்தின் ஆகப்பெரும் தத்துவங்களை உள்ளடக்கி நிற்கிறது சைவம். சிவத்திலிருந்து உருவாகி, மீண்டும் சிவத்தையே அடையம் தத்துவத்தை உரைப்பது தான் சைவம். சிவனடியார்களால் அருளப்பட்ட திருமுறைகள், இந்த மண்ணில் ஆகச் சிறந்த இடங்களாக அறியப்பட்ட தலங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.அந்த திருமுறைகளை தந்த அருளாளர்கள், இந்த உலகில் எல்லாமும் சிவனே என்று எளிமையாக்கித் தந்தனர். அனைத்தையும், தன்னைப்போலவே நினைத்துப் பார்ப்பது தான் சிவ தத்துவம். தன்னை அறிந்தால், எல்லாம் தானாக வந்து சேரும். தன்னை அறிந்தவன் தன்னிலிருந்து விலகி நிற்பான். தன்னிலிருந்து விலகி நிற்பவன், தனக்கு எதிரில் இருக்கும் அனைத்தையும் தன்னைப் போலவே உணர்வான். அதுவே இறைநிலை எனும் சிவநிலை.

உணர்ந்து படிக்கணும்

லிங்கத்தின் உட்பொருளை உணர்ந்தவரின் முன், 'எண் குணத்தான்' எனும் இறைவன் வந்து நிற்பான். சிவனை உணர்வதற்கு சிவனடியார்கள் எழுதிய நுால்களை உணர்ந்து படிக்க வேண்டும். சிவனைப்பாடும் இடத்திற்கு, 12 திருமுறைகளும் வந்து நிற்கும்.எல்லாம் வல்ல இறைவனின் பெருமைகளையும் சக்தியையும், தமிழால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் செயலை செய்தவர்கள் அறிஞர்களும் சித்தர்களும். அவர்கள் செய்த பணிகளையே, தற்போது தருமை உள்ளிட்ட ஆதீனங்கள் செய்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sridhar Iyer
மே 05, 2025 17:24

அருமையான தகவல்


Madras Madra
மே 05, 2025 11:20

அருமை நல்ல செய்திகள் கருத்துக்கள்


vbs manian
மே 05, 2025 09:27

அருவருப்பு ஏச்சுக்களுக்கு மத்தியில் சைவம் நடராஜர் திருமூலர் பற்றி ஆழ்கடலில் கண்டெடுத்த முத்து போல் அருமையான பேச்சு. ஐரோப்பா செர்ன் அணு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலையை நிறுவியுள்ளார்கள்


babusrinivasan
மே 05, 2025 09:12

திருமறை புத்தகம் ஒரு பொக்கிஷம்


Padmasridharan
மே 05, 2025 08:37

மீண்டும் சிவத்தையே "அடையம்" தத்துவத்தை.. இதை கவனிக்கவும் அய்யா.. தமிழை காக்கும் சரியான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வாக்கியங்களை அடையும்


Kalyanaraman
மே 05, 2025 08:20

தன்னை முழுமையாக அறிந்ததால் சிவத்தை அறியலாம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க. மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி


Yes your honor
மே 05, 2025 08:01

தீருமூலரும், திருஞானசம்பந்தரும் பிறந்த இதே மண்ணில் தான் திகவும், திமுகவும் பிறந்து இந்துக்களாகிய நம்மை சீரழிக்கின்றன. மென்டென்ன பிராம்மனுடு மெட்டு பூமி ஒக்கடே, சண்டாளனு உண்டேதி சரி பூமி ஒக்கடே, மென்டென்ன பிராம்மனுடு மெட்டு பூமி ஒக்கடே, சண்டாளனு உண்டேதி சரி பூமி ஒக்கடே, சரி பூமி ஒக்கடே, சரி பூமி ஒக்கடே என்று மிகத் தெளிவாக இவ்வாறு நிகழும் என்பதை நூறுவருடங்களுக்கு முன்பே பிரம்மம் ஒக்கட்டே பரப்பிரம்மம் ஒக்கட்டே என்னும் பாட்டில் அன்னமாச்சார்யார் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கலியுகம்.


Yes God
மே 05, 2025 08:01

தன்னை உணரும் நிலைக்கு ஏகாந்தம் தேவை. அதற்கு யோகாப்பியாசம் தேவை. நாமிருப்பது மெட்டிரீயல் யுகம். தேவைகள் அதிகம். தனிமை இல்லை. இது கைவர சாத்தியமில்லை.


நிக்கோல்தாம்சன்
மே 05, 2025 07:05

சிதம்பரம் அருகிலேயே வசித்தும் இதனை அறியாமல் போனேன் என்று வருந்துகிறேன் மீண்டும் இதற்காகவே ஒரு முறை செல்ல முயல்கிறேன், ஆனால் வேற்று மதத்தினாலான நான் உள்ளே போக அனுமதி உண்டா


Palanisamy T
மே 05, 2025 06:37

தன்னை உணரும் நிலை அவ்வளவு சுலபத்தில் முடியாது. இறைவனை யுணரும்போது avanai


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை