உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

வெயில் காலம் துவங்கியது.. அதிகாலை குளிர்; பகலில் சூடு

சென்னை : தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை பனி மூட்டம் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் காலம் துவங்கி விட்டது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வடக்கில் இருந்து வீசும், வாடை காற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அதிகாலை பனி மூட்டம் ஏற்படுகிறது. லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும், பல்வேறு இடங்களில், நேற்று அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டது. இது, மேலும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இன்றும், நாளையும் பகல் நேரத்தில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக காணப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பிப்., மாதத்திலேயே இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால், கோடையின் தாக்கம் இப்போதே துவங்கி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
பிப் 05, 2025 10:04

பொதுவாக பெருபான்மையான ஆண் மக்கள் உடல் முழுவதும் மூடிக்கொண்டு காலை இரவு இருக்கிறார்கள். இவர்கள் வெய்யிலையும் குளிரையும் தாங்கும் சக்தி இல்லாதவர்கள் இயற்கை காற்று உள்ள இடத்தில் வெற்று உடம்புடன் தூங்குபவர்கள் எந்த கால நிலையம் சந்திக்கும் திறனுள்ளவர்கள்.


mindum vasantham
பிப் 05, 2025 08:04

திமுக ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகிறது