உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்

தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'சமத்துவம் பொங்கட்டும்' என சமூக வலைதளத்தில் பேசிவிட்டு, சமூகநீதியை வீசியெறிந்து, சர்வாதிகாரப்போக்கில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். புத்தாண்டை வாணவேடிக்கையுடன் உலகமே கொண்டாடிய வேளையில், அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இருளில் அடைத்து வைத்ததோடு, நள்ளிரவில் திக்குத் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு கொடுமைப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5m7pdz99&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பணிநிரந்தரம் செய்வோம் என்று கூறிய உங்கள் தேர்தல் வாக்குறுதி எண் 285 தான் மறந்துவிட்டது என்றால், தூய்மைப் பணியாளர்கள் மனிதர்கள் என்பது கூடவா உங்கள் திராவிட மாடல் அரசிற்கு மறந்துவிட்டது? புத்தாண்டில் திக்குத் தெரியாமல் தூய்மைப் பணியாளர்களைத் தவிக்கவிட்ட பாவமே, திமுக அரசை திக்குத் தெரியாமல் துரத்தியடிக்கும். தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பிரேம்ஜி
ஜன 02, 2026 07:41

இந்த அரசுதான் மீண்டும் 2026 இல்! கொஞ்சம் காசு, கொஞ்சம் வாக்குறுதி கொடுத்து தமிழர்களை சல்லிசாக விலைக்கு வாங்குவது வெகு சுலபம்! நல்ல பலமான கூட்டணி இருந்தாலே திமுகவை வெல்ல முடியும்! அது அமைக்க உங்களுக்கு முடியாது!


பேசும் தமிழன்
ஜன 01, 2026 18:04

விடியல் தலைவர் எதிர்கட்சியாக இருந்த போது.... தூய்மை பணியாளர்களை சந்தி்த்து ஆதரவு தெரிவித்தார்.... ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன்.... அவர்களின் கோரிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கிறார்.


Nathansamwi
ஜன 01, 2026 17:50

மத்தியிலும் பெரும்பாலும் அனைத்து அரசு பணிகளும் தனியார் மயம் தான் ....


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 17:31

மகரிஷி. பிடி சாபம்ன்னு விட்டாராக்கும். அந்த நாலு கோடியை யாரை அடித்து பிடுங்கினீர்?


Vasan
ஜன 01, 2026 17:07

அவர்களது கண்ணீர் மத்திய அரசை அழித்து விடப்போகிறது, ஜாக்கிரதை. ஏனென்றால், அநீதியை தட்டி கேட்காததும் தண்டனைக்குரிய குற்றமே.


Chandru
ஜன 01, 2026 16:49

இவர் பேச்சு தமிழகத்தில் இதுவரை எடுபடவில்லை


புதிய வீடியோ