உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்

நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: நாகையில் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரம், 7.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி புதுப்பொலிவு பெற்றுள்ளது.சோழர்கள் ஆட்சி காலத்தில் கி.பி., 9ம் நுாற்றாண்டு முதல், நாகை முக்கிய துறைமுக பட்டினமாக சிறந்து விளங்கியது. சோழர்கள் ஆட்சியில், ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் நாகையில் தங்கி, ஆன்மிக பணியாற்றி வந்தனர்.அப்போது, மலாய் நாடு என்றழைக்கப்பட்ட இந்தோனேஷியாவில் பிரசித்தி பெற்று விளங்கிய புத்த மதத்தைச் சேர்ந்த விஜயோத்துங்கன் என்ற அரசன், சோழ நாட்டில் வசிக்கும் தன் குடிமக்கள் புத்தரை வழிபடுவதற்காக, தஞ்சையை ஆண்ட கண்டராதித்த சோழரிடம் அனுமதி பெற்று, தன் தந்தை சூடாமணி வர்மன் பெயரில் புத்த விஹாரத்தை நாகையில் நிறுவினார்.சோழர்களுக்கு பின் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் சூடாமணி விஹாரம் இருந்து வந்தது. சூடாமணி விஹாரத்தில் தங்கி ஆன்மிக பணியாற்றி வந்த பிரெஞ்ச் யேசு சபையினர், புத்த விஹாரத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு, ஆண்களின் கல்வியறிவுக்காக செயின்ட் ஜோசப் கல்லுாரியை கட்டி, 1844ம் ஆண்டு திறந்தனர்.கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், 1887ம் ஆண்டு, ஆங்கிலேயர்களிடம் 30,000 ரூபாய்க்கு, சூடாமணி விஹாரத்துடன் கூடிய சுற்றுவட்டாரப் பகுதியை விற்பனை செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லுாரி கட்டடம், மாவட்ட நீதிமன்றமாக மாறியது.பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இடம் மாறிவிட்டன. சூடாமணி விஹாரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, 7.09 கோடி மதிப்பீட்டில் சூடாமணி விஹாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை, ஹெரிடேஜ் பிரிவினரால் 2022 பிப்., மாதம் துவங்கிய பணி, கடந்த மாதம் நிறைவடைந்து, நீதிமன்ற நிர்வாகத்திடம் கட்டடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டட கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.புதுப்பொலிவு பெற்றுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

theruvasagan
நவ 03, 2024 11:24

சூடாமணி விஹாரததைப் பற்றிய வர்ணனை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் நேரில் நாம் பார்ப்பது போல அற்புதமாக இருக்கும். இன்றைக்கு அந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே.


சாண்டில்யன்
நவ 03, 2024 14:14

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி சூடாமணி விஹாரததைப் பற்றிய வர்ணனையில் சேர்க்க வேண்டியதை சேர்த்து, தவிர்க்க வேண்டியதை தவிர்த்துள்ளது தெரிகிறது. நதியைப்போல ஒதுங்கி சென்றுள்ளார் என்றால் மிகையல்ல. ஏனெனில் அவரே நேரில் பார்த்ததில்லை கேள்வி ஞானமே. கேள்விப் பட்டதெல்லாம் நாவலுக்கு தேவையற்றதானதால் சொல்ல விரும்பவில்லை. சூடாமணி விஹாரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் இன்றைக்கு அந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே.


எஸ் எஸ்
நவ 03, 2024 11:06

பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழி வர்மன் இந்த சூடாமணி விகாரத்தில் தங்கி சிகிச்சை பெற்றதை அமரர் கல்கி அழகாக எழுதி இருப்பார்


தமிழ்வேள்
நவ 03, 2024 10:26

சுட்லரிடம் சொல்லுங்கோ.. ஜார்ஜ் பொன்னையா எஸ்றா துர்க்குணம் வகையறாக்களை கூப்பிட்டு பிரியாணி போட்டு.. ஏசுவின் வழிகாட்டலில் விஜயோத்துங்க வர்மன் ராஜராஜ சோழர் ஏசுவை ஏற்றுக்கொண்டதற்கான காணிக்கை என்று கூட துண்டு சீட்டு பிரவசனம் செய்வார்..


சாண்டில்யன்
நவ 03, 2024 09:08

பழமை மாறாமல் புதுப்பித்த தொல்லியல் துறையினருக்கு நன்றி பாராட்டுவோம். அப்படியே அங்கிருந்த தங்கத்தால் ஆன மிகப்பெரிய புத்தர் சிலையை மீட்டெடுத்து அங்கே கொண்டுவந்து நிறுவ வேண்டும்


ஆரூர் ரங்
நவ 03, 2024 10:56

உபிஸ் அந்த சிலைக்கும் மாலை அணிவித்து கிடா வெட்டி விருந்து வைப்பார்கள். எனது உணவு. எனது உரிமை.


சாண்டில்யன்
நவ 03, 2024 11:39

சூசகமா சொன்னதை புரிஞ்சுகிட்டு சரியான பதில் போட தெரிஞ்சா புத்திசாலித்தனத்தை வரலாறு தெரிந்த ஞானத்தை பாராட்டலாம். அந்த புத்தர் சிலை எங்கே போனதுன்னு தெரிஞ்சா சொல்லு அதை விட்டுவிட்டு ஓடாதே


தமிழ்வேள்
நவ 03, 2024 12:36

சாண்டில்யன், ஹிந்து கோவில்களின் தங்க வைர வைடூரிய பொக்கிஷங்கள் விக்ரகங்களுக்கு மூர்க்க மார்க்க பந்துக்கள் கைகளில் என்ன நடந்ததோ அதுதான் புத்தர் விக்ரஹத்துக்கும் நடந்தது..இன்றும் நாகைப்பகுதியில் மண்ணில் கிடைக்கும் புத்தர் சிலைகள் ஏராளம்.. முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒரு விஹாரை சேதியம் அமையுங்கள். உங்கள் எஜமான பாலைவன வகையறாக்கள் அனுமதித்தால்.. ஹிந்துக்கள் நிச்சயம் உதவுவோம்


சாண்டில்யன்
நவ 03, 2024 14:25

புத்தர் பிறந்த இந்த மண்ணில் அவரது மதம் வளரவில்லை ஸ்ரீமத் ராமானுஜர் உபயம். பக்கத்து இலங்கையிலும் சீனா ஜப்பானிலும் தழைத்தோங்கியுள்ளது. புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் இருக்க வேண்டியதுதானே ஏன் எப்படி மண்ணுக்குள் போனதாம்? மாலிக்காபூர் வந்து புதைத்து விட்டானா? அத சொல்லலியே


தமிழ்வேள்
நவ 03, 2024 15:29

சாண்டில்யன் விஹாரை களை கைவிட்டு பாழடையவிட்டு சோறு கண்ட இடம் தேடி பௌத்தன் ஓடிப்போனால் இடிந்த விஹாரையின் புத்த பிரதிமைகள் மண்ணில் தானே புதையும்.ஹிந்து கோவிலில் வைத்து கும்பிட்டு விழா எடுக்கவா முடியும்?


KR
நவ 03, 2024 08:24

Described in Kalkis Ponniyin Selvan book. Good to see this monument getting restored. Proper upkeep and maintenance from now on will be needed


ராஜமோகன்.v
நவ 03, 2024 07:46

உள்ளூர் சாராய கும்பல் ஸ்டிக்கர் ஓட்டும் முன் மோடி அவர்கள் திறந்து வைக்க வேண்டும்


Kasimani Baskaran
நவ 03, 2024 07:04

தென்னமெரிக்காவை சீர் செய்தது போல இந்தியாவையும் சீர் செய்யவில்லையே என்று ஸ்பானியர்களுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.


மோகனசுந்தரம்
நவ 03, 2024 06:23

எந்த அதி புத்திசாலி அதை திறந்து வைக்கப் போகிறாரோ கடவுளுக்கு தான் வெளிச்சம்.


புதிய வீடியோ