உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்

நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.மதுரையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ் சமூகம் எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை. கலையை போற்றலாம், கலைஞர்களை கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது ரொம்ப கொடுமையான போக்காக மாறிவிடும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n8btl97z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிலைப்பாடு

அதனை வருங்கால தலை முறையினர், அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நினைக்கும் பொழுது தற்போதைய நிலை கண்டு ஒரு நடுக்கம் இருக்கிறது. ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை? நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு? நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சினிமா உள்ளது.

திரை கவர்ச்சி

ஆனால் எந்த ஒரு மாநிலத்தில் நிகழாத விபத்து தமிழகத்தில் நடக்கிறது ஏன்?. திரை கவர்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் தமிழ் இனம் விழிப்புற்று ஏழ வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல், முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவது விஜயின் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.

குறுக்கிட்ட போலீசார்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வருகை தந்த நிலையில், போலீசார் நிருபர்கள் சந்திப்பை முடிக்குமாறு கேட்டனர். அதற்கு சீமான் ஒரு நிமிடம் பொறுங்கள், நீங்கள் பேசும் நேரத்தில் முடித்து விடுவேன் என கூறினார். பின்னர் சில நிமிடங்களில் பேட்டியை முடித்து விட்டு சீமான் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

krishnan
அக் 27, 2025 21:10

இது உங்களுக்கும் பொருந்தும்... மா....?


M.Sam
அக் 27, 2025 19:57

உன்னை தாணுஉக உன்னை தானுக சினிமா என்பது ஏபிஓ வந்ததோ அப்பவே அரசியில் தோற்று போச்சு இல்லையா மக்கள் நிலை தானே ரசிக்கிறார்க மிச்சத்தை வருகிறார்கள் அப்போ மக்கள் மன்னனிலை ஏபிஓ மாறும் சினிமா இல்லாவிட்டால் மாறும் அது நடக்கின்ற காரியமா உண்ணு பண்ணுக நீங்க பிரகிஜறம் எல்லாம் பண்ணாதீர்கள் சினிமா படம் ஏடுங்க உங்க கொள்கை கோட்பாடு இதை சினிமா பாணியில் சொல்லுங்கள் முக்கியா ஏதிரி யார்உ/ மூல ஏதிரி யாரு என்று படத்தில் காட்டுங்கள் அப்பத்தான் நம்ம சனங்கள் புரிவார்கள் இல்லாவிட்டால் நஹி நஹி நஹி நஹி


Kudandhaiyaar
அக் 27, 2025 18:53

காமராஜ்கு பிறகு எடபடியார் தான் சினிமா இல்லாத முதல்வர் மற்றெல்லோரும் சினிமாவினரே. தமிழனுக்கு சினிமா தான் உலகம். சினிமா காரர்கள் தான் ஆளவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதனால் தான் நான்காம் கலைஞர், மூன்றாம் ஸ்டாலின், இரண்டாம் உதய் , முதலாம இன்பர் சினிமா தொடர்பில் இருந்தால் தான் அரசாள முடியும்


visu
அக் 27, 2025 18:40

சீமானின் வரையறைகள் எல்லாம் அவர் தான் அளவுகோல் தமிழன் என்று அவரிடம் சான்றிதழ் பெறவேண்டும் விளக்கம் கேட்கணும் நடிகன் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் அவர் போல பெரியநடிகரா வளராமல் தோல்வியுற்ற நடிகரா/ இயங்குனரா இருக்கனும்


pakalavan
அக் 27, 2025 18:02

எல்லாம்


RAMESH KUMAR R V
அக் 27, 2025 17:53

ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் அது உண்மையான இந்திய தேசப்பற்று.


Rajasekar Jayaraman
அக் 27, 2025 17:10

இவர் எப்படி வந்தார் அரசியலுக்கு சினிமா தானே காரணம் இவருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்


samvijayv
அக் 27, 2025 17:00

ஒரு இயக்கனராக இருந்து சரி வர பட வாய்ப்புகள் கிடைக்கலாம் ஒரு அரசியல் கட்சி தொடங்கி நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது அதை விட மிக கொடுமையானது.


nagendhiran
அக் 27, 2025 16:14

டேய் சைமா நீயும் நடிகன்தான்டா?


Xavier
அக் 27, 2025 16:08

அப்பறோம் உங்கள மாதிரி பேசுனா மட்டும் போதுமா ?


புதிய வீடியோ