UPDATED : டிச 04, 2025 08:03 PM | ADDED : டிச 04, 2025 08:00 PM
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக விஷத்தை கக்கியுள்ளனர் திருமா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது ராம ரவிக்குமாரின் கோரிக்கை. இதை ஏற்று செயல்படுத்தியிருந்தால், இப்படி ஒரு விஷயம் நடந்ததே வெளியில் தெரிந்திருக்காது.இதை நீதிமன்றம் வரை செல்ல அனுமதித்தது முதல் தவறு. நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபம் ஏற்றாமல் விட்டது இரண்டாம் தவறு. அதை செய்யாமல், மேல் முறையீடு செய்தது மூன்றாம் தவறு.இப்படி தவறு மேல் தவறு செய்த தமிழக அரசுக்கு ஆதரவாகவும், தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராகவும், விஷம் கக்கும் பேச்சுக்களை பேசி வருகின்றனர் சில அரசியல் தலைவர்கள்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆகியோரின் பேச்சு, நீதிபதியை தனிப்பட்ட வகையில் குறைகூறுவதாகவும், தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும் உள்ளது.நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசியல் கட்சியினரின் மோசமான செயல்பாட்டுக்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சியினர், பொதுமக்களின் கருத்தாக உள்ளது.