உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனதின் குரல் தேசப்பற்றை வளர்க்கும்: நாகேந்திரன்

மனதின் குரல் தேசப்பற்றை வளர்க்கும்: நாகேந்திரன்

சென்னை: 'மக்களின் தேசப்பற்றையும், அறிவாற்றலையும் வளர்க்கும் விதத்தில், 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமைந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பிரதமர் மோடி, நேற்று தன், 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக, சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், தமிழகத்தில் உள்ள செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம். நாட்டுப்புறப் பாடல் மரபுகள், பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித் துறை முக்கியத்துவம், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் 11 ஆண்டுகால நிறைவு என பல விஷயங்களை பெருமையுடன் பகிர்ந்தார். குறிப்பாக, ஓலைச்சுவடி எழுத்துக்களை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக் கொடுத்து, இலக்கிய சேவையாற்றி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 'ஞான பாரதம் மிஷன்' திட்டத்தின் வாயிலாக, பழங்கால ஓலைச்சுவடிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார். சுதேசி இயக்கம் ஆக., 7ல் துவங்கியது; 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' ஆக., 8ல் துவங்கியது; நம் நாடு ஆக., 15ல் சுதந்திரம் பெற்றது என பல பெருமை, தியாகங்களை உள்ளடக்கிய ஆகஸ்ட், ஒரு புரட்சிகரமான மாதம் என குறிப்பிட்டார். மக்களின் தேசப்பற்றையும், அறிவாற்றலையும் வளர்க்கும் விதத்தில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை