UPDATED : அக் 17, 2024 06:40 AM | ADDED : அக் 17, 2024 12:31 AM
சென்னை: சேப்பாக்கம், வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில், பொது மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். மழைக்கால சிறப்பு முகாமில் கையிருப்பில் உள்ள மருந்துகள் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின், உதயநிதி கூறியதாவது:
முதல்வர் உத்தரவுப்படி அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் வெள்ள தடுப்பு பணியில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறோம். மக்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல், காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கும், துாய்மை பணியாளர்கள், குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் அதன் அலுவலர்களுக்கும் நன்றி. வெள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்கிறார். இவ்வளவு மழை கொட்டியும் தண்ணீர் தேங்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.