உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி போலீசில் ஒப்படைப்பு

பா.ம.க., ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி போலீசில் ஒப்படைப்பு

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி, சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிளியனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மற்றும் கிளியனுார் போலீசார் தைலாபுரம் தோட்டத்தில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது, ஒட்டுக் கேட்பு கருவியை ராமதாஸ், போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் தனியார் துப்புறியும் ஏஜென்சி மூலமும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை துப்பறியும் நிறுவனம் வசம் இருந்த ஒட்டு கேட்பு கருவி, நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமதாஸ் உத்தரவின்பேரில், நேற்று மதியம் 2:15 மணிக்கு, கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கிளியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம், ஒட்டு கேட்கும் கருவி, அதில் இணைக்கபட்டிருந்த சிம், பேட்டரி ஆகியவற்றை ஒப்படைத்தார். பின்னர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: விசாரணைக்காக தற்போது போலீசாரிடம் ஒட்டு கேட்பு கருவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை யார், எதற்காக வைத்தனர் என விசாரணைக்கு பிறகு தெரியும். இந்த ஒட்டு கேட்கும் கருவி, லண்டனில் வாங்கப்பட்டுள்ளது. இக்கருவியில் லைக்கா சிம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டு கேட்கும் கருவி, பேசும்போது மட்டும் ஆன் ஆகிவிடும். மற்ற நேரத்தில் 'ஆப்' ஆகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஜூலை 24, 2025 11:50

அதன்மூலம் எப்படி ஒட்டுக் கேட்கப்படும் என்பது நிரூபிக்கப்பட வாய்ப்புண்டா ????


baala
ஜூலை 24, 2025 11:29

இதை பொருத்தியவர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாதா?


Rajasekar Jayaraman
ஜூலை 24, 2025 08:31

விளம்பரத்துக்காக இவர்களே வைத்து எடுத்ததோ மஹா கேவலம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 08:12

ஏனுங்க இந்த ஒட்டு கேட்கும் கருவியில் ஒட்டிக்கிட்டிருந்தது என்னன்னு யாரும் கேட்கமாட்டாங்களா ?


பிரேம்ஜி
ஜூலை 24, 2025 07:09

யார் வைத்தது என்று இரண்டு நாளில் தெரியும் என்று பத்து நாட்களுக்கு முன்னர் மரம் வெட்டி சொன்னதாக செய்தி வந்ததே...! இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 08:11

யார் வைத்தது என்பதை கண்டு பிடிக்க இன்னொரு கருவி இருக்கு. ஆனா அதை கண்டுபுடிக்கவே முடியாது.


பிரேம்ஜி
ஜூலை 24, 2025 08:36

அருமையான கமெண்ட்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை