உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை கலைவாணர் அரங்கில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மை தான். வெயில், மழை, வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பங்கு முக்கியமானது. உங்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. தூய்மை பணியாளரகள் செய்வது வேலையல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. விடியும் போது சென்னை நகரம் தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்.சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் ஓய்வு அறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தமிழகம் தான் கிளீன் சிட்டி என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் வாரிசுகள் உயர்கல்வி பெற்று, அரசு பதவிகளை பெற வேண்டும். மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் செய்து தரும். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம். அரசு தனது கடமையை செய்யும். மக்களும் பொறுப்பாக இருந்து பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
நவ 15, 2025 11:42

சும்மா ரீல் சுத்த வேண்டாம்.


கடல் நண்டு
நவ 15, 2025 11:37

நீங்க செய்வது இல்ல மக்களுக்கான ஆட்சி.... மக்களின் வீழ்ச்சி … எல்லோருக்கும் புரித்துவிட்டது உங்க சூழ்ச்சி ..எழுதி வெச்சுக்கோங்க இத குறிச்சி .. இனி இல்லை உங்க காட்சி ..


amsi ramesh
நவ 15, 2025 11:31

ஓ ... தலைவரே அவர்களுக்காக எவ்வளவோ பண்ணுணிங்க அவர்கள் அதை மறக்காமல் உங்களுக்கு திருப்பி செய்வர்கள்


Shankar
நவ 15, 2025 11:25

அதற்காகத்தான் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாமல் விட்டீர்களோ அரசு முதல்வர் அவர்களே.


கௌதம்
நவ 15, 2025 11:22

அதான் காவல்துறையை வைத்து அடித்து இழுத்துட்டு போக சொன்னீர்களே... பிறகு என்ன? 5 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சியை பிடிக்க அள்ளிவிட்ட வாக்குறுதியை சற்று மாற்றி பேசுகிறீர்கள்... வேறு எந்த மாற்றமும் வாழ்க்கையில் அவர்களுக்கு இல்லை


duruvasar
நவ 15, 2025 11:20

நீங்க செய்வது இடியாப்பம் . இவர் மகன் அல்ல அப்பா


SJRR
நவ 15, 2025 11:14

இதன்மூலம் முதல்வர் என்னசொல்ல வருகிறார். நீங்கள் செய்வது சேவைதான், அதனால் எந்தப்பலனும் எதிர்பார்க்கவேண்டாம் என்றா? அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்கு சேவைதான் செய்யவேண்டும். அனால் பலர் அப்படி செய்வது இல்லையே?


l.ramachandran
நவ 15, 2025 11:12

ஆமாம். Government employees மற்றும் ஆஃபீஸ்ர்ஸ், MLAs, MPs எல்லோரும் சேவை பண்ணுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தேவை சம்பளமும், கிம்பளமும். வீண் தம்பட்டம்.


V K
நவ 15, 2025 11:06

தூய்மை பணியாளர்கள் பசி யை போக்கும் அதே போல் திமுகவின் ஊழல் கொள்ள பசி யை போக்கும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ