உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

திருட்டுகளும், உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக; சீமான் சொன்னது இதுதான்!

சென்னை: திருட்டுகளும் உருட்டுகளும் இப்ப அதிமுக, அடுத்து திமுக என இபிஎஸ் பிரசாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் வருவது ஒரு வருகை. அது அவ்வளவுதான், நான் அதில் எண்ணத்தை பார்க்க, அதிகாரத்தில் இருந்தா வெள்ளைக்கொடி காட்டுவார்கள், எதிர்க்கட்சியாக இருந்தால் கருப்புக்கொடி காட்டுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.கேள்விகளும், பதிலும்!நிருபர்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?சீமான் பதில்: அவசரம் அவசரம், மாநாடு நடத்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். காத்திருங்கள்.நிருபர்: திமுகவின் திருட்டுகளும், உருட்டுக்களும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்?சீமான் பதில்; இது கொஞ்சம் முடிந்த பிறகு அவங்க வந்து அதிமுகவின் திருட்டுகளும், உருட்டுகளும் என ஆரம்பிப்பார்கள். மக்கள் இருட்டில் நின்று முழித்துக் கொண்டிருப்பார்கள்.இந்த உருட்டு தான் 60 வருடமாக நடக்கிறது. இவர்கள் அவர்களை சொல்வார்கள். அவர்கள் இவர்களை சொல்வார்கள்.

மாடு மேய்க்கும் போராட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி தேனி மாவட்டம் அடப்பாறையில் நடைபெறும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று, மலையேறி மாடுகளை மேய்க்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, இந்த மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kjp
ஜூலை 26, 2025 20:27

உங்களால் தமிழ்நாட்டுக்கு முக்கா துட்டு பிரயோஜனம் கிடையாது. திமுக ஜெயிப்பதற்கு என்ன வழியோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள். உருட்டுகளையும் திருட்டுகளையும் விட்டுவிட்டு விஜய் கூட சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாமே. இந்த தடவை நீங்கள் ஏமாந்து போவீர்கள்.வெறும் வாய்ச்சவடால்கள் என்றுமே செல்லாது.


Raja
ஜூலை 26, 2025 19:36

சீமான் எப்போது நார்மலா மாறுவார் என்பது தெரியவில்லை.


spr
ஜூலை 26, 2025 19:35

இரண்டு கழகங்களும் மாறி மாறி கொள்ளையடிக்கிறார்கள் என்பதனைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் ஏறக்குறைய கொள்ளையடிக்க மனமிருந்தும் அதிக வாய்ப்பில்லாத மற்றும் துணிவில்லாத அகில இந்தியக் கட்சியாகிய காங்கிரசும் ஆங்காங்கே சில கொள்ளையில் பங்கு பெறுகிறார்கள் அதனால் வாய்மூடியிருக்கிறார்கள் பாஜக கொள்ளையடிப்பது குறித்துத் தெரியவில்லை ஆனாலும் தமிழகத்துக்கு எதிரான செயல்களை நம் மீது திணிக்கிறார்கள் இவரோ ஆடு மாடு போராட்டமென்று உப்புச் சப்பில்லாத அரசியல் நடத்தி விளம்பரம் தெடிக் கொள்வதில் குறியாக இருக்கிறார். வரப்போகும் வெற்றிக்கழக வேந்தர் என்ன செய்யப்போகிறாரென்றே தெரியவில்லை இதுதான் நடைமுறை உண்மை தமிழக மக்கள் எல்லாம் அறிந்தும் வேறு வழியின்றி பாஜக மற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதே வழியில் போகும் காங்கிரசையம் எதிர்க்க கழகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்


ராமகிருஷ்ணன்
ஜூலை 26, 2025 19:13

ஆட்சிக்கு வராமலே சீமான் உருட்டும் உருட்டு சகிக்க முடியவில்லை. எந்த நாட்டிற்கும் பொருந்தாத உருட்டுக்கள், இவருக்கு பின்னாலே ஒரு கூட்டம். அவமானம்.


Suppan
ஜூலை 26, 2025 21:25

சீமான் செய்த ஒரே நல்ல வேலை ராமசாமி நாயக்கரின் திருட்டுத்தனமாக கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தது.


முக்கிய வீடியோ