மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
சென்னை: ''அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்பாமல், முந்தைய அரசு தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்ததில் உள்நோக்கம் உள்ளது,'' என்று கல்வி அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி : பெரிய பள்ளிவாசல்களில் பெரிய அளவில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வழங்கப்படும் மானியம் 60 லட்சம் ரூபாயை அதிகரிக்க வேண்டும். சிறிய பள்ளிவாசல்களில், மராமத்து பணிக்கு ஒதுக்கப்படும் 10 லட்சம் ரூபாயை, உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் குறிப்பிட்டதை போல, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஒதுக்க வேண்டும்.தமிழகத்தில் 1991 முதல், அரசு மானிய உதவியின்றி துவக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் பகுதி மானியத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், அரசு மானியமில்லாத வகுப்புகள் ஆகியவற்றில் முதுகலை பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மாதம் 1,500 முதல் 3,000 ரூபாய் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஆட்சியின் இறுதி நாட்களில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில், 13 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் மற்றும் 640 ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி, 340 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. 1991க்கு பிறகு துவக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், லாட்டரி என்ற சூதாட்டம் ஒழிக்கப்பட்டது. இதே துணிச்சலுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.அமைச்சர் சண்முகம் : கடந்த 1991க்கு பிறகு துவக்கப்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் பகுதி சுயநிதியில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் அரசு மானியம் கிடையாது என்று, 1998ல் தி.மு.க., அரசு சட்டம் இயற்றியது. கடந்த ஆட்சியின் இறுதியில், உள்நோக்கத்துடன், தேர்தலை மனதில் வைத்து, ஆசிரியர் பணியிடங்களை அங்கீகரித்து உத்தரவிடப்பட்டது.அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படும் நிலையில், இருக்கும் காலியிடங்களை நிரப்பாமல், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசாணை வெளியிடப்பட்டது. அதுவும், தனியார் பள்ளிகளில் கூடுதலாக 6,400 ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து, கடந்த பிப்ரவரி 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு வேறு உள்நோக்கம் உள்ளது. அரசுக்கு 340 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, தனியாருக்கு சாதகமாக அரசாணை வெளியிடப்பட்டது. அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்திருக்க வேண்டும். கடந்த ஆட்சியின் இறுதியில், அனைத்து துறைகளிலுமே கிடைத்தவரை லாபம் என்று, கிடைத்த வரை சுருட்டினர்.
5 hour(s) ago | 5
16 hour(s) ago | 1
16 hour(s) ago