உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்

பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் பல காலமாக போலி வாக்காளர்கள் உள்ளனர். ஏதோ இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் உள்ளதுபோல் எஸ்ஐஆர் பணிகளை செய்வது ஏன்? பீஹாரை போல் தமிழகத்திலும் தங்களுக்கு வாக்களிக்காத ஓட்டுகளை நீக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பரையில் என் படம் இருந்தால் அந்த வீட்டில் இருக்குமா? இதேபோல் தம்பி விஜய்யின் படம் இருந்தாலும் அந்த வீட்டில் ஓட்டு இருக்காது. நீக்கி விடுவார்கள். எஸ்ஐஆர் பணிகளுகாக திமுகவினர் உடன் செல்லும்போது ஒரு வீட்டில் ஜெயலலிதா படமோ அல்லது எடப்பாடி பழனிசாமி படமோ இருந்தால் அங்கும் ஓட்டு இருக்குமா? பாஜக செல்லும்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு ஓட்டு இருக்குமா? இப்பொழுது பிரதமர் மோடி பீஹாரில் ரூ.10,000 போட்டார் இல்லையா? நம்மாள் ரூ.15,000 கூட போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமது அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும். பீஹார் பார்முலாவை பின்பற்றி, அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதுதானே? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இன்னும் ஒரு ரெண்டு லட்சம் கோடியை கடனாக்கி விட்டு போக வேண்டியது தானே? இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
நவ 19, 2025 01:13

இங்கே இன்னும் ஒரு கேவலமான பிறவி. சீமான் என்னும் கிறிஸ்தவன்.


naadodi
நவ 18, 2025 23:57

10000 ரூபாய் முக்கிய மந்திரி மகிளா ரோஜகர் யோஜனா மூலமாக அதிகார பூர்வமாக அளிக்கப்பட்டது. திருமங்கலம் formula இல்லை.


kjpkh
நவ 18, 2025 22:47

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திமுக வெற்றிக்காக வேலை செய்கிறார். இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நாம் நொந்து கொள்ள வேண்டியதுதான்.


Raja k
நவ 18, 2025 22:23

தமிழ்நாட்டில் 20,000 தருவார், ,


சூர்யா
நவ 18, 2025 21:26

மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. அண்ணன் எவ்வளவு தெளிவாக வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.கவிற்கு வாக்கு கேட்கிறார் பாருங்கள் ? பீகாரில் பத்தாயிரம் இங்கு , பதினைந்தாயிரம் தி.மு.க அரசு தரப் போகிறது தயாராக இருங்க என ஆளுங்கட்சிக்கு பதிலா இவர் தெளிவாக ஹாஹ் ஹா என சிரித்துக் கொண்டே தி.மு.கவிற்கு மறைமுகமாக வாக்கு கேட்கிறார்? அண்ணே நீங்க இந்த அளவுக்கு மாறுவீங்கன்னு சத்தியமா நினைக்கல அண்ணே? தமிழில் வஞ்சப் புகழ்ச்சி அணி என ஒன்று உண்டு மற்றவரை இகழ்வது போல் புகழ்வது, புகழ்வது போல் இகழ்வது. அண்ணன் இப்ப தி.மு.க அரசை இகழ்வது போல் பாருங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ பதினைந்தாயிரம் வரப் போகிறது எனப் புகழ்கிறார்! நாளையே பாருங்கள் நமது வங்கி கணக்கில் பதினைந்தாயிரம் தமிழக அரசு போடப் போகிறதாமே என மக்கள் பேசப் போவதை!


கடல் நண்டு
நவ 18, 2025 21:23

பணம் கொடுத்தால் தான் தமிழன் ஓட்டு போடுகிறான் ... பணம் இல்லாமல் எப்படி கட்சி, தேர்தல் , வெற்றி??? எதார்த்த கள நிலவரம் நன்றாக தெரிந்தும் சும்மா வாயில வட சுட வேண்டியது ... ஆமா இவர் எந்த தொழில் செய்த வருமானத்தில் கார் வாங்கினார்?


Anu Sekhar
நவ 18, 2025 21:13

மக்களையும் முட்டாள்களாக ஆக்குகிறார்கள்


Vasan
நவ 18, 2025 21:09

தமிழக பெண்களை காசுக்கு ஓட்டு போடுபவர்கள் என்று கேவலமாக பேசும் சீமானுக்கு தமிழக பெண்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.


தமிழ்வேள்
நவ 18, 2025 20:50

கூத்தாடி படத்தை நடுவீட்டில் வைப்பவன் நிச்சயமாக கூறுகெட்டவனாகத்தான் இருக்க முடியும்.. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஓட்டுரிமை என்பதே வேஸ்ட்....


MUTHUKUMAR C
நவ 18, 2025 20:43

வர வர இவர் மேலே உள்ள மரியாதை பொய் விட்டது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ