த.வெ.க.,வை முடக்க முயற்சி நடக்கிறது
பொதுவாக வீட்டிலோ, குடும்பத்திலோ, மிகப்பெரிய இழப்பு ஏற்படும்போது, 16 நாள், துக்க நாளாக, வலியுடன் இருப்போம். எங்கள் குடும்பத்தை சேர்ந்த, 41 பேர் இறந்துள்ளனர்; 16ம் நாள் முடியும் வரை, எங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவோ, அவதுாறுகளுக்கு பதில் அளிக்கவோ முடியாமல், வலியுடன் கடந்து செல்கிறோம். அதன்பின், உண்மைகளை கண்டிப்பாக சொல்வோம். த.வெ.க.,வினர் மீது, பொய் குற்றச்சாட்டுகளை எழுப்பி, கைது நடவடிக்கைகள் தொடருகின்றன. த.வெ.க.,வை முடக்கும் செயல் நடக்கிறது. இதை அமைதியாக கடந்து, சாமானிய மனிதனின் நம்பிக்கையான நீதித்துறையை நாடி, உண்மையை வெளிக்கொண்டு வர, சட்ட போராட்டத்தை விஜய் துவங்கி உள்ளார். விரைவில், உண்மை வெளிவரும். கரூருக்கு விஜய் செல்வதற்கான பயண திட்டம் உருவாகிறது. - ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர், த.வெ.க.,