உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை

அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை

இஸ்தான்புல் : 'உக்ரைனில் அமைதிப் பேச்சு நடத்த உண்மையிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான 'எம்.ஐ., - 6'ன் தலைவர் ரிச்சர்ட் மூர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும், ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடின் ஆர்வம் காட்டவில்லை என பிரிட்டன் உளவுத் துறை அமைப்பான 'எம்.ஐ., - 6' ன் தலைவர் ரிச்சர்ட் மூர் கூறியுள்ளார். தன் ஐந்து ஆண்டு கால பதவியை இம்மாத இறுதியுடன் நிறைவு செய்ய உள்ள அவர், மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ரஷ்ய அதிபர் புடின் நம்மை ஏமாற்றி வருகிறார். அவர் தன்னுடைய ஏகாதிபத்திய விருப்பத்தை, தனக்குள்ள அனைத்து வழிகளிலும் திணிக்க முயல்கிறார். ஆனால், உக்ரைனுக்கு எதிரான போரில், அவரால் வெற்றி பெற முடியாது. சுலபமாக வெல்ல முடியும் என எண்ணி, உக்ரைன் வீரர்களை அவர் குறைத்து மதிப்பிட்டு விட்டார். ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என உலகை நம்ப வைக்க முயல்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வரலாறுக்காக, தன் நாட்டின் எதிர்காலத்தை புடின் அடகு வைக்கிறார். அவர் உலக மக்களிடம் மட்டுமின்றி, தன் நாட்டு மக்களிடமும் பொய் சொல்கிறார். ஒருவேளை தனக்குத்தானே கூட அவர் பொய் சொல்லலாம். போரை நிறுத்த அமைதி பேச்சு நடத்துவதற்கு உண்மையிலேயே அவர் ஆர்வம் காட்டுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். உளவு தகவல்களை பரிமாற பிரிட்டனின் புதிய இணையதளம் பிரிட்டனின் வெளிநாட்டு உளவு சேவை அமைப்பான எம்.ஐ.,6, உலகம் முழுதும் உள்ள உளவாளிகளை தொடர்பு கொள்ளவும், அவர்களுடனான தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், 'சைலண்ட் கூரியர்' என்ற பெயரில் ஒரு புதிய டார்க் இணைய தளத்தை துவங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள உளவாளிகளை இணைப்பதே இதன் நோக்கம். ரஷ்யா போன்ற கடுமையான கண்காணிப்பு உள்ள நாடுகளில் உள்ளவர்களுக்கும் முக்கியமான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான, பாதுகாப்பான வழிகளை வழங்குவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ManiMurugan Murugan
செப் 20, 2025 23:59

இவர் சொல்வதைப் பார்த்தால் ஐரோப்பிய ந நாடுகள் அமெரிக்கா அனைவரும் உக்ரைன் வைத்து தங்கள் பஞ்சத்தை தீ விக்கி நபர்கள் என்று நினைக்கிறேன்


Balamurugan
செப் 20, 2025 10:57

உண்மையில் ரஷ்யாவுடன் போரை நடத்துவது அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான். போருக்கான முக்கிய காரணமே நேட்டோவுடன் உக்ரைனை இணைக்க முயன்றது தான். உக்ரைனை நேட்டோவுடன் இணைக்க மாட்டோம் போருக்கு பிறகு ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவுக்கே என்று ஒப்பந்தம் போடுங்கள் போர் முடியப்போகிறது.


KOVAIKARAN
செப் 20, 2025 08:06

உளவு தகவல்களை பரிமாற பிரிட்டனின் புதிய இணையதளம் பிரிட்டனின் வெளிநாட்டு உளவு சேவை அமைப்பான எம்.ஐ.,6, உலகம் முழுதும் உள்ள உளவாளிகளை தொடர்பு கொள்ளவும், அவர்களுடனான தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், சைலண்ட் கூரியர் என்ற பெயரில் ஒரு புதிய டார்க் இணைய தளத்தை துவங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள உளவாளிகளை இணைப்பதே இதன் நோக்கம். ரஷ்யா போன்ற கடுமையான கண்காணிப்பு உள்ள நாடுகளில் உள்ளவர்களுக்கும் முக்கியமான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான, பாதுகாப்பான வழிகளை வழங்குவதே இந்த தளத்தின் நோக்கமாகும். இந்த செய்தியை நான் 3 பாகங்களாக எழுதி, 2024 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டு வெளிவந்த AMARAMIT-THE LEGEND Part 1, Part 2, Part 3 ஆகிய crime கதையில் நான் விரிவாக எழுதியுள்ளேன். MI6 ஐ சேர்ந்த ஜெர்மனியிலிருக்கும் ஒரு உளவாளி, ரஷ்யாவில் உள்ள ஒரு rogue உளவாளியிடமிருந்து உலகளவிலுள்ள உளவுத்துறையை சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளில் யார் யார் உள்ளார்கள் என்ற ஒரு லிஸ்ட் ஐ ஒரு dark website மூலம் hack செய்து அந்த list ஐ லண்டனுக்கு அனுப்புவதற்குள், ரஷ்யா அதைக்கண்டுபிடித்து அவனைக் கொல்வதற்க்காக, KGB ஐ அனுப்புகிறது. அதை அறிந்த அந்த MI6 உளவாளி அதை ஒரு ஸ்பெஷல் courier மூலம் ஹாங்காங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அனுப்பிவிடுகிறார். பின்னர், KGB அவனை சுட்டுவிட்டு, அவன் இறந்துபோய் விட்டான் என்றெண்ணி ஏமாற்றமடைந்து திரும்புகிறார்கள். அவன் உயிர் பிழைத்து லண்டனுக்கு தகவல் அனுப்பிவிட்டு தலை மறைவாகிறான். ஹாங்காங் பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து வேறு ஒரு பிரிட்டிஷ் உளவாளி லண்டனுக்கு அந்த லிஸ்ட் அடங்கிய ஒரு பாதுகாப்பான பெட்டியில் எடுத்துச் எல்லா ஹாங்காங்க் விமானநிலையத்திற்கு செல்லும் வழியில், அந்த நகரத்திலுள்ள ஒரு மாபியா கும்பல் அதை பறித்துச் சென்றுவிடுகிறது. அதை நமது கதையின் நாயகன்- அவன் ஒரு International Asaasin - எவ்வாறு மீட்டு மீண்டும் MI6 லண்டனுக்கு அனுப்புகிறான் என்று சில அத்தியாயங்களில் எழுதியுள்ளேன். இதைப் புத்தகத்தை படித்தவர்களு, மேற்கண்ட செய்தி நினைவிற்கு வரும். நான் கற்பனையில் உருவாக்கி என் கதையில் வரும் பல விஷயங்கள், - போதை மருந்துகள் கடத்தும் மாபியா, கள்ளத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை, உளவாளிகள், பலவகையான ஆட்களைக் கொள்ளும் ரசாயனங்கள் போன்றவை நான் இதுவரை எழுதிய நான்கு ஆங்கில நாவல்கள் மற்றும் இரண்டு தமிழ் crime நாவல்களில் எழுதியுள்ளேன். என்னுடைய இரண்டு தமிழ் நாவல்களின் கதையை நமது தினமலர் நாளிதழ்களில் படிக்கலாம் வாங்க பகுதியில் விமர்சனம் ஒரு புத்தகம், அக்டோபர் 2023 மற்றும் இரண்டாவது புத்தகம் மே 2024ல் வந்துள்ளது என்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்


Palanisamy Sekar
செப் 20, 2025 08:03

நல்லா இருந்த நாட்டில் உள்ளே நுழைந்து அந்த நாட்டை தங்களுடன் சேர்த்துக்கொண்டு ரஷ்யாவுடன் போர் செய்து கபளீகரம் செய்திடலாம் என்கிற ஐரோப்பிய ஒன்றிய நேட்டோ நாடுகள் இப்போ விட்டுவிட்டு போகவும் முடியாமல் சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றது. பாதிப்புக்கு உள்ளான நாடு தான் அமைதி பேச்சில் ஆர்வம் காட்டவேண்டுமே தவிர அடித்து தூள் கிளப்பும் ரஷ்யாவிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும். நாடுபிடிக்கும் பிரிட்டனின் அந்த இழி புத்தி இன்றைய தலைமுறை பிரிட்டன் அரசியல்வாதிகளிடமும் கொடுமையாக தென்படத்தான் செய்கின்றது. உக்ரைன் நாட்டு மக்கள் இப்போது வேறுநாடுகளுக்கு அகதிகளாக சென்றுகொண்டுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய நேட்டோ நாடுகளின் திட்டங்களில் பாம் போட்டு தவிடுபொடியாக்கிவிட்டார் புதின்.


Indian
செப் 20, 2025 07:25

அமேரிக்கா ஐரோப்பா இங்கிலாந்து ஆயுதங்கள் கொடுத்து சண்டையை நீட்டிப்பதையே விரும்புகிறார்கள் ..


naga
செப் 20, 2025 07:16

வெறும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் சண்டை பற்றி எல்லாம் பிரிட்டன் பேசலாமா. இந்தியாவை அடிமை போல 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பிரிட்டிஷ் நடத்திய கொடுமைகள் இன்னமும் இந்தியர்கள் மனதில் வடுவாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து கொள்ளை அடித்த பொருட்கள் கணக்கில் அடங்காதவை. பிரிட்டிஷ்க்காரர்களாகிய நீங்கள் இந்தியாவில் செய்த அட்டூழியங்கள் பிரிட்டனை ஒருநாள் பிச்சை எடுக்க வைக்கும். இதற்கான சூழல் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ‌அந்த நாளை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.


புதிய வீடியோ