உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது: ஆர்ப்பாட்டத்தில் வாசன் பேச்சு

ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது: ஆர்ப்பாட்டத்தில் வாசன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, பல கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தி.மு.க., அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து, சென்னை மாவட்ட த.மா.கா., சார்பில், நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வாசன் பேசியதாவது:வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய, தி.மு.க., ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பத் தயாராகி விட்டனர். காஸ் சிலிண்டர், டீசல் மானியம், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு, கல்விக்கடன் ரத்து, அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை, நீட் தேர்வு ரத்து என, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க, மொழி மற்றும் தொகுதி சீரமைப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். தொகுதி மறு சீரமைப்பால், தொகுதிகள் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது. அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க., மீது கோபமாக உள்ளனர். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். தமிழக மக்களை குழப்பி ஓட்டுகளைப் பெற தி.மு.க., முயற்சிக்கிறது. பல கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எங்கள் கூட்டணி அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Matt P
மார் 30, 2025 13:02

நீட் தேர்வு ரத்து என்று கோரிக்கை விடுத்தாரா? இவர் மத்தியில் ஆளுறாரா? தமிழ்நாட்டை ஆளுறாரா? இவர் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்?


Sampath Kumar
மார் 30, 2025 11:12

பொய் பாக்கு மட்டும் போடு


sampath, k
மார் 30, 2025 09:32

Are you have peoples support atleast in your birth place. Are you win in the election. For getting M.P., you may go any extent. Are you eligible to continue in the politics. What is your role in Tamilnadu. There are so many questions against you.


Amar Akbar Antony
மார் 30, 2025 09:28

ஐயா தமிழரே என்று உங்கள் தந்தையார் தீய மு க வை ஆதரித்தாரோ அன்றே தமிழகம் வீழ்ந்துவிட்டது.


अप्पावी
மார் 30, 2025 08:22

அப்போ மூத்த ஊழல்களுக்கு மன்னிப்பு உண்டா? போய் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் மூணு மாசத்தில் வழக்கை முடிக்கச் சொல்லுங்க. அணிலையே ரெண்டு வருஷமா ஒண்ணும் பண்ண முடியலியாம். பேச வந்துட்டாரு.


xyzabc
மார் 30, 2025 06:53

மாடல் ஆட்சியில் வூழல் என்பது ஓத்துக் கொள்ளப்பட்ட விஷயம். ரொம்ப பேச தேவையில்லை.


Tamil Inban
மார் 30, 2025 05:56

இந்த ஆள பாபநாசத்தில எலக்ஷனல் நிக்க சொல்லுங்க, நிர்க்கமாட்டர், ஏன்ன டெபாசிட் கிடைக்காது, எல்லோருடைய நிலத்தையும் அந்தகாலத்தில் இவரோட மூதாதையர் ஆட்டைய போட்டுட்டாங்க


vinoth kumar
மார் 30, 2025 03:31

தமிழ்நாட்டில் மன்னிப்பு உண்டு , இல்லையெனில் தி மு க எப்படி ஆட்சிக்கு வர முடியும்?


தமிழன்
மார் 30, 2025 02:04

70000 கோடிக்கு கேடி வேலை செய்த அஜித்பவார் தேர்தல் பத்திரம் ஊழல் பிரதமர் நிவாரண நிதி ஊழல் ஹைவேஸ் ரோடு ஊழல் என பல ஊழல்கள் செய்தே வாசிங் மெசினில் வெளுக்க வைத்து தியாகிகளாக்கும் கட்சியுடன் எதற்கு வாசன் கூட்டணி கூட்டுப் பொரியல் எல்லாம் வாசிங் மெசின் நல்லா வேலை செய்யிது போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை