உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்

வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்

திருச்சி: அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலைதுார பயணங்கள் செல்லும் இந்த பஸ்களில் தரமற்ற டயர்கள், அடிக்கடி பிரேக் பெயிலியர், போதிய வெளிச்சம் இல்லாத ஹெட்லைட், சரியான பராமரிப்பு இல்லாமை, தரமற்ற உதிரி பாகங்கள் ஆகிய பிரச்னைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அண்மையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே விரைவு போக்குவரத்து கழக பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணம் என கூறப்படுகிறது.

'ரீடிரேட் டயர்'

அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 2,000 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பஸ்களை பராமரிக்கும் பணி செய்யும் தொழில்நுட்ப பிரிவில், 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பிரிவில் ஆட்களை நியமித்து, 26 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. டயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஒரிஜினல் டயர் தான் போட வேண்டும். ஆனால் தற்போது ரீடிரேட் செய்த டயர் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்காக பயன்படுத்தப்படும், 'ஸ்டாக் அட்ஜஸ்டர்' என்ற கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அந்த கருவியை கழுவியும், சுத்தம் செய்தும் பயன்படுத்துவதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாகவே பிடிக்கும் அபாய நிலை உள்ளது.

'ரெடிமேட் ஹெட்லைட்'

மோசமான நிலையில் இருக்கும் டயரை கூட மாற்றாமல், டயர் வெடிக்கும் வரை பயன்படுத்த நிர்பந்திக்கின்றனர். இதனால் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்னை தான், ராமநத்தம் அருகே பஸ் விபத்துக்கு காரணம். முன்பெல்லாம் மாதம், ஒன்று அல்லது இரண்டு பஸ்கள், 'ப்ரேக் டவுன்' ஆகும். ஆனால் கடந்த மாதம் மட்டும், 190 பஸ்கள் ப்ரேக் டவுன் ஆகியுள்ளன. பெரும்பாலான பஸ்களில் ஹெட் லைட்கள் வெளிச்சம் இல்லை. இதனால் அனைத்து டிரைவர் களும் தனியாக ரெடிமேட் ஹெட்லைட் ஒன்றை சொந்த செலவில் தயாரித்து வைத்துள்ளோம். நாங்கள் பணிக்கு செல்லும் போது பஸ்சில் பொருத்தி விட்டு, பணி முடியும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுவோம். பஸ்சில் நிரந்தரமாக உள்ள ஹெட்லைட் வெளிச்சத்தை மட்டும் நம்பி பணிக்கு சென்றால், டிரைவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதுகுறித்து, துறை அமைச்சர் அல்லது அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆகையால், அரசு விரைவு பஸ்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, போக்குவரத்துத்துறை அமைச்சரும், முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Karunagaran Palani
ஜன 02, 2026 07:50

அரசு பஸ் ஓட்டுநர்கள் உலக மகா சாதனையாளர்கள் காயலாங்கடை இரும்பை ஒட்டவைத்து தயாரிப்பு செய்து சில டவுன் கிராம பஸ் திருவண்ணாமலை மாவட்ட பஸ் ஓட்டுநர்கள் வேலூர் மாவட்டம் பஸ் திறமையாக ஓட்டுவது உலக சாதனை இஞ்சின் பழசு பாடி புதுசு ஓஹோன்னான்னா


சிட்டுக்குருவி
ஜன 01, 2026 22:23

வருமானம் எல்லாம் CCC க்கே போதவில்லை . எப்படி மோட்டார் வாகனங்களையெல்லாம் பழுதுபார்த்து நல்ல நிலைமையில் வைத்துக்கொள்வார்கள் .கடமையை செய்பவர்களின் உயிருக்கு 2 லட்சம் , கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம் உத்திரவாதம் கொடுத்திருக்கின்றார்களே .அதுதான் உத்திரவாதம் .


Amar Akbar Antony
ஜன 01, 2026 20:56

தமிழக அரசின் திராவிட மாடல் அரசுதான் இந்தியாவிலேயே போக்குவரத்து துறையில் முதலாக நம்பர் ஒன்றாக உள்ளது என்பதை ஒன்றிய அரசின் தரவுகள் கூட சொல்கின்றன. சமீபத்தில் கூட வோல்வோ எனும் மிகவும் மேம்படுத்தப்பட்ட தனியாருக்கு நிகராக பேருந்துகள் விட்டிருக்கிறோம். மேலும் தொலைதூர போக்குவரத்தில் தனியார் பேரூந்துகளையும் பயணிகளுக்காக அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கிறோம். எதிர்க்கட்சிகளின் இந்த அவதூறு பதிவை இந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படித்தான் விடியா டாஸ்மாக் அரசின் முதல்வருக்கு பதில் வரும். வோல்வோ பேருந்தை கொடுத்து எதனை சுருட்டினார்கள் என்பது நமக்கு தெரியாது. போட்டோ ஷூட்டிங் நடத்தியாச்சு. அப்புறம் பழைய பேருந்துகள், பாகங்கள் இவையெல்லாம் மாற்றினால் கமிஷன் வரவில்லை. ஆகவே மாற்றவில்லை. மக்கள் பற்றி கவலையில்லை. வரும் மாதங்களில் பொருளும் பணமும் கொடுத்தால் மீண்டும் வருவோம் என்பது தி மு க எண்ணம்.


Anantharaman Srinivasan
ஜன 01, 2026 19:26

பஸ்களின் முகப்பில் விடியல் பயணம் என்பதற்கு பதிலாக எமலோக பயணம் என்று எழுதி விடலாம்.


P.sivakumar
ஜன 01, 2026 15:42

உன் வீட்டிலும் இருக்கிற உன் மனைவிக்கு மாதா மாதம் 1000 ரூவா தர்ராங்க இத வச்சு வைத்தியம் (?) பார்த்துக்க!!


Balaa
ஜன 01, 2026 15:40

அது சரி. உங்களில் சிலர் வேலைக்கு வந்தால், பல பொதுமக்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.‌


duruvasar
ஜன 01, 2026 15:29

"வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என, எதிர்மறையாக கூறக்கூடாது. அதை வேலைக்கு சென்றால்இயற்கை எய்த உத்திரவாதம் உண்டு என்று பகுத்தறிவுடன் சொல்லவேண்டும்.


Ram pollachi
ஜன 01, 2026 15:22

சார் தனியார் பேருந்து முதலாளிகள் மெக்கானிக்கு மட்டும் ஒழுங்காக பணத்தை கொடுத்துவிடுவார்கள், மற்ற அனைவருக்கும் வருட கணக்கில் பாக்கி வைத்துவிடுவார்கள், கடனை கொடுத்துவிட்டு பலர் வண்டியின் பின்னே அலைகிறார்கள்... மோட்டார் தொழில் இன்று மோசடி தொழிலாக மாறிவிட்டது... தனியாரை அரசுடைமையாக்கி மங்களம் பாடியாச்சு....


Kadaparai Mani
ஜன 01, 2026 15:08

தமிழ் ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு இதை எடுத்து கொள்ளுமா ...அவ்வளவு தைரியம் எந்த காட்சி ஊடகத்திற்கு உள்ளது


அசோகன்
ஜன 01, 2026 13:56

எங்கள புரிஞ்சிக்கவே மாடீங்களா.... இலவச பயணம் என்பது பஸ்சில் செல்ல அல்ல மேலே போவதற்கு


சமீபத்திய செய்தி