உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: 'இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை என்பதால், அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.செங்கல்பட்டில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. இதனை கண்டுகொள்ளாமல் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார் என இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்: பிறந்த நாள் அறிவிப்பு வெளியிட்ட போது உதயநிதி ஒரு வேண்டுகோள் விடுத்தார். பேனர்கள் வைக்க வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். ஏழை, எளிய மக்களுக்கு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை, திருநங்கைகளுக்கு உதவி தொகை, கருணை இல்லங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இன்று 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தோம். இதனை எப்படி ஆடம்பரம் என்று எடுத்து கொள்ள முடியும். பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது அனைத்துமே மஞ்சளாகதான் தெரியும். தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். சில தினங்களுக்கு முன்பு, ராமதாஸ் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வேறு வேலை என்பதால் அறிக்கை விடுகிறார் என பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நிக்கோல்தாம்சன்
நவ 28, 2024 20:30

உங்களை போல எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி பொதுமக்கள் மீது கடன் வாங்கிய பணத்தில் சிலை வைப்பது என்று அவருக்கும் படம் எடுங்க


Ramesh Sargam
நவ 28, 2024 19:49

இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தினம் தினம் அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேசும் உங்களுக்கும் வேறு வேலை இல்லை போல தெரிகிறது.


joe
நவ 28, 2024 19:06

திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு இப்படி பேசினால் ,,,,அரசியலை விட்டு விட்டு நீங்கள் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்க.


joe
நவ 28, 2024 18:44

சர்வாதிகார ஆட்சியில் சேகர் பாபு எப்படி எல்லாமுமோ பேசுவாரா ?இதுதான் திராவிட மாடலா ?


Haja Kuthubdeen
நவ 28, 2024 13:55

எதிர்கட்சியா இருந்தபோது உம் தலைவர் நாள் தவறாமல் அறிக்கை வெளியிட்டது வேற வேலை இல்லாததால்தானா!!!


JANA VEL
நவ 28, 2024 13:45

பழைய வேலை தொழில் என்ன மினிஸ்டர் ?


k Kumar
நவ 28, 2024 13:42

அப்படி என்னதான் முதலமைச்சருக்கும் உங்களுக்கும் வேலை இருக்குதுன்னு தெரியலையே


R.MURALIKRISHNAN
நவ 28, 2024 12:25

நீரே வேறு வேலை இல்லாததனால்தானே மந்திரி வேலைக்கு வந்தீர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை