உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஷோபா குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஷோபா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: '' தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது,'' என சிறு குறு நடுத்தர தொழில்துறை மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வேதனை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தென்னை நார் உற்பத்தியாளர்கள் கலந்துரையாடலில், பங்கேற்ற சிறு, குறு நடுத்தர தொழில்துறை மத்திய இணை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வு பிரச்னையை சந்தித்து வருகிறது. தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். அதில், பாதி பேருக்கு பணம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அனுமதித்து விட்டு, அவர்களே ஓசி பஸ் என்கின்றனர்.தமிழகத்துக்கு வழங்கிய நிதியை முழுமையாக செயல்படுத்தவில்லை. நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:01

தமிழகத்தில் ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லை.


Padmasridharan
ஜூலை 11, 2025 18:47

சாமியோவ், ஆண்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆண்களுக்கு சீருடையில் உள்ளவர்கள் பாலியல் தொல்லைகள் கொடுக்கின்றனர். கடற்கரை போன்ற பொது இடங்களிலிருந்து அதட்டி, மிரட்டியடித்து வண்டியில் அறைக்கு கூட்டி செல்கின்றனர். வேலை இல்லாமலிருந்தாலும் பேருந்தில் காசு கொடுத்து பயணசீட்டு வாங்க வேண்டி இருக்கின்றது. இலவச சாப்பாடு பள்ளிக்கூடத்தில் கொடுத்தாலும் மதுக்கடைகளில் பணத்தை செலவழிக்க வழி வகுத்துள்ளனர்.


Barakat Ali
ஜூலை 11, 2025 18:17

சிவானந்தா சாலை சம்பவம் ...... அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ???? நாங்கள்லாம் அப்பவே இப்படி .....


Karthik Madeshwaran
ஜூலை 11, 2025 17:46

யாரோ எழுதி கொடுத்த பழைய தவறான ஷ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து அப்படியே கதறிவிட்டு போயிருக்கிறார் புள்ளிவிவரம் தெரியாமல். . பல பாஜக ஆளும் வட மாநிலங்களை விட குறிப்பாக குஜராத், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு எவ்வளோவோ மேல். அதை நான் சொல்லல.. உங்கள் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தான் சொல்கிறது.


vivek
ஜூலை 11, 2025 20:41

திராவிட சொம்புகள் தினமும் பேப்பர் படிப்பதில்லை...பாவம்....


venugopal s
ஜூலை 11, 2025 17:20

இவர் தான் தமிழர்களை திருடர்கள் என்று கூறி விட்டு நீதிமன்றத்திடம் அதற்காக மன்னிப்பு கேட்ட புண்ணியவதி, இப்போது வந்து தமிழகப் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! சரியான பாஜக ஃபிராடு ப்ராடெக்ட்!


vivek
ஜூலை 11, 2025 20:43

இருநூறு சொம்புகள் சவுண்ட் அதிகம் வருது


Narayanan Muthu
ஜூலை 11, 2025 20:48

மீண்டும் ஒரு மன்னிப்பு கேட்க ஆவலாக உள்ளார்போல.


முக்கிய வீடியோ