உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 போலீசார் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l76fuxq7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0https://x.com/NainarBJP/status/1939200197319630862

வாக்குமூலம்

கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை போலீசார் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

தீவிர விசாரணை

தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. போலீசாரின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், போலீசாரும், அந்தப் பகுதி தி.மு.க.,வினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

ராஜமரியாதை

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தி.மு.க.,வினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் தி.மு.க.,வினர் யாரும், போலீசார் விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளை போலீசார் விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தி.மு.க., ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.

23 பேர் மரணம்

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து, 23 பேர் போலீசார் விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், முதல்வர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார். தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. https://x.com/annamalai_k/status/1939224812729356640

சட்ட நடவடிக்கை

உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:33

கட்சியில் IPS உங்களுக்கே மதிப்பில்லை என்ன செய்வது


என்னத்த சொல்ல
ஜூன் 29, 2025 19:19

இது எல்லா ஆட்சியிலும் ஒன்றிறண்டு நடக்கத்தான் செய்கிறது. சாத்தன் குளம் கொலை மாதிரி இது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அரசை வசைபாடலாம்.


G Mahalingam
ஜூன் 29, 2025 16:31

ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினம் தினம் போராட்டம் நடத்த வேண்டும். போன ஆட்சியில் கம்யூனிஸ்ட் விசிக காங்கிரஸ் திமுக தினம் தினம் போராட்டம் நடத்தினார்கள் அது போல அதிமுக பாஜக தினம் தினம் போராட்டம் நடத்த வேண்டும். ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.


Manaimaran
ஜூன் 29, 2025 15:10

இரு கட்சிகளும் இணைந்து மிக பெரிய பேரட்டம் நடத்தனும். ஆனால் இங்கயே உள்குத்தல்


Ravi
ஜூன் 29, 2025 14:21

காவலர்கள் ரவுடி போல் நாகரீகமில்லாமல் ஒருமையில் பேசி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். அப்படியே பேசாதிங்க என்றால் என்ன எதிர்த்து பேசுராயா என்பார்கள். இதற்குதான் நம் தாத்தாக்கள் உயிர் விட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்களா. மூன்று ஆண்டுகளில் 23 போர் விசாரனை கொலை. அதிகார கொலைக்கு முடிவு கிடையாதா. சாத்தான் குலம் குற்றவாளிகளுக்கு அவர்கள் சாவதற்குள் தண்டனை கொடுப்பார்களா. கவலர்களுக்கு அடிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது முதல்வர் பதில் சொல்வாரா.


KRISHNAVEL
ஜூன் 29, 2025 14:19

நிர்வாக திறமை இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அரசியல் திறமை குறைவுதான் ,இதே நேரம் தி மு க வாகஇருந்தால் பல நாடகங்கள் நடத்தப்பட்டு இருக்கும் ,ஆனால் இவர்களோ எக்ஸ் தளத்தில் அறிக்கை விடுவதோடு முடித்து கொள்கிறார்கள்


Padmasridharan
ஜூன் 29, 2025 14:01

ஸ்டேஷனில் மட்டுமல்ல, இவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு மற்றவர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு பாதகம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பணம் / பொருள் புடுங்குவது, மிரட்டியடிப்பது, ஒருமையில் அசிங்கமாக பேசுவதும், வண்டியில் அறைக்கு கூட்டி கொண்டு சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதும் நடக்கின்றது. இவர்கள் என்ன சிறுவர்களா. செய்யும் தவறுகளுக்கு ஆட்சியை குறை கூறமுடியாது.


karupanasamy
ஜூன் 29, 2025 13:59

ரவுடிக்கு மகுடம் சூட்டினால் நாடு என்னவாகும் என்பதற்கு மற்றுமோர் சாட்சி.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 16:53

....மணிப்பூர் வேற ஒரு பக்கம் ... காஷ்மீர் தீவிரவாதி சும்மா அசால்ட்டா ஊடுருவி பஹல்காமில் சுட்டுட்டு சும்மா அசால்ட்டா தப்பிக்கிறாங்க .....இன்னிவரைக்கும் அவனுங்களை கைது செய்யலை .....ரவுடிக்கி முடி சூட்டினா .....


முக்கிய வீடியோ