உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் எந்த விதி மீறலும் கிடையாது: தனுஷ் நோட்டீஸ்க்கு நயன்தாரா பதில்

அதெல்லாம் எந்த விதி மீறலும் கிடையாது: தனுஷ் நோட்டீஸ்க்கு நயன்தாரா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=odkocukm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இது குறித்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் அளித்த பதில்: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். தனுஷ் தொடர்ந்து வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mohan
நவ 29, 2024 16:07

அய்யா நீதிபதி அவர்களே இந்த கூத்தாடி நடிகர்கள் சண்டை போட்டு சாகட்டும், அவர்கள் வழக்கு இன்னும் கொஞ்சகாலம் தாமதித்தால் ஒன்றும் குறைந்து விடாது. தெரிந்தே இந்த விஷயத்தில் நுழைந்த வணிக கம்பெனியான நெட்பிலிக்ஸ் அதற்கான விலையை தந்துட்டு போகட்டும் மற்ற பொது மக்களின் மிக முக்கிய வாழ்வாதார வழக்குகளை சீக்கிரம் முடித்து வையுங்க அய்யா.


SUBRAMANIAN P
நவ 29, 2024 14:18

ரெண்டு பேருமே பாவம், பிச்சைகாரங்க.. வேளை வேலை சோத்துக்கு கஷ்டப்படுறாங்க.


Ramesh Sargam
நவ 29, 2024 12:54

தனுஷ் நயன்தாராவின் இந்த சண்டையையே ஒரு படமாக தயாரித்து வெளியிட்டால்... வசூல் அள்ளும்


Anantharaman Srinivasan
நவ 29, 2024 09:48

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்து வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும். இதுபோன்ற வீண் ஜம்ப வழக்குகளை நீதிமன்றங்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பொதுமக்களின் உண்மையான வாழ்வாதார வழக்குகள் ஆண்டு கணக்கில் தள்ளிப்போகின்றன.


prakash raj
நவ 29, 2024 11:21

உண்மை தான்....


Anvar
நவ 29, 2024 11:23

பொது ஜனத்துக்கான நீதிகள் மறுக்க படுகின்றன தாமதிக்கப்படுகின்றன இதனால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன காரணம் பொது ஜனத்துக்கான நீதிகள் தாமதிக்கப்படும்போது குற்றவாளிகளுக்கு அது மிக சாதகமாகிவிடுகிறது தினமும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கு மட்டுமே வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுமானால் சாமானியர்கள் துன்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான் அப்புறம் எங்கே சமூக நீதி


Sudha
நவ 29, 2024 09:08

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த செய்தி போடுவீர்கள்? வேறு வேலையே இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை