உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடக்காது

வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடக்காது

சென்னை: கோவை மாவட்டம், வால்பாறை சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், அமுல் கந்தசாமி. இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இதனால், வால்பாறை தொகுதி காலியாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=luet93jx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொதுவாக, ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பதவி காலியானால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தற்போதைய தி.மு.க., அரசின் பதவிக்காலம், 2026 மே 9ல் முடிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.எனவே, பொதுத் தேர்தலுக்கு, ஓராண்டு கூட இல்லாத நிலையில், வால்பாறை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை