உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெர்மாகோல், தெர்மாகோல் என்று என்னை ஓட்டுகிறீர்கள்; சட்டசபையில் செல்லூர் ராஜூ வருத்தம்!

தெர்மாகோல், தெர்மாகோல் என்று என்னை ஓட்டுகிறீர்கள்; சட்டசபையில் செல்லூர் ராஜூ வருத்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிகாரிகள் சொல்லித்தான் செய்தோம், ஏன் என்னை தெர்மாகோல், தெர்மாகோல் என்று ஓட்டுகிறீர்கள் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 2வது நாளாக இன்று (மார்ச் 18) நடைபெற்றது. பல்வேறு முக்கியமான மக்கள் நல பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=39bwvxx4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ பேசும் போது, ஓராண்டில் ராமேஸ்வரத்தில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். ஆட்சி முடிய ஓராண்டு உள்ள நிலையில் எப்படி அமைப்பீர்கள். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தீர்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஓசூரில் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதியை பெற்று விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றார்.அவர் தெர்மோகோல் பற்றி குறிப்பிட்டுப் பேசியதும், தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. ராஜூவும் சேர்ந்து சிரித்தார்.டி.ஆர்.பி.ராஜாவின் பதிலைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, விமானநிலையம் விவரம் பற்றி கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரிகள் கூறியதைக் கேட்டு இப்போதைய அமைச்சர்களும் பல விஷயங்களை செய்கிறீர்கள். அதுபோலத்தான் அதிகாரிகள் சொன்னதை நானும் செய்தேன். தெர்மாகோல், தெர்மாகோல் என்று கிண்டலடிக்கிறீர்கள், சரி பரவாயில்லை என்று கூறினார். செல்லுார் ராஜூ பேட்டிசட்டசபைக்கு வெளியே செல்லுார் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிறைய பிரச்னைகள் உள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை.அ.தி.மு.க., ஆட்சியில் 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த ஆட்சியில் எந்த நியமனமும் நடக்கவில்லை. கடந்தாண்டு 2800 ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இன்று வரை பணி நியமனம் வழங்கவில்லை. இந்த அரசு செய்தது மக்கள் மீது வரி மேல் வரி போட்டது மட்டும் தான்.ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்போவதாக கடந்தாண்டு முதல்வர் அறிவித்தார். இன்று வரை பூமி பூஜை கூட போடவில்லை. அதற்குள் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்போவதாக கூறுகின்றனர். இருப்பது ஓராண்டு. அதற்குள் எப்படி செய்ய முடியும் என்று கேட்டால் தெர்மோகோல் என்று கூறி ஓட்டுகின்றனர்.மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், முதன்மை பொறியாளர் எல்லாம் சேர்ந்து ஒரு திட்டத்துக்கு அழைத்தார்கள். அதன்படி போனதற்காக, என்னை இன்னும் தெர்மோகோல் என்று ஓட்டுகிறார்கள்.இவ்வாறு சிரித்துக் கொண்டே கூறினார் செல்லுார் ராஜூ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Uthaya Kumar
மார் 20, 2025 12:23

Do not discriminate against others. Do not play with the assembly because MLAs and MPs have realized that they represent the people.


K.Ramakrishnan
மார் 19, 2025 23:53

திமுகவினருக்கு ஒரு வேண்டுகோள்.. செல்லூரார் ஆதங்கம் என்ன தெரியுமா? என்னை தெர்மாகோல் விஞ்ஞானி என்று ஓட்டுகிறீர்களே.. கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்று எடப்பாடியும் தான் சொன்னார். ஊர்ந்து போய் முதல்வர் ஆனார். அது பற்றியும் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்று நினைக்கிறார். எனவே அவரது ஆசையை இனியாவது சட்டசபையில் நிறைவேற்றுங்கள்.


S.jayaram
மார் 19, 2025 11:21

செல்லூர் ராஜூ வுக்கு பேசத்தெரியவில்லை, ஆமாங்க நீங்கள் எப்படி அதிகாரிகளின் யோசனையுடன் செயல்படு கிரீர்கலோ அப்படித்தான் நானும் அப்போது செயல் பட்டேன், கரெண்ட் கம்பியில் அணில் ஓடினால் கரெண்ட் வராது, மெத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டது போல செயல் பட்டேன் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில். என்று சொல்லியிருந்தால் அமைச்சர் வாயை இருக பொத்தி இருப்பார்


Chandrasekaran Balasubramaniam
மார் 19, 2025 09:11

உங்களை எதுக்கு சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். நல்லது கெட்டது ஆராய்ந்து மக்கள் நல பணி செய்வதற்கு தானே. அதிகாரிகள் சொல்லத்தான் செய்வார். நீங்க தான் முடிவெடுக்கணும்.


Baskaran M
மார் 19, 2025 09:10

Tax imposed based on the suggestion of IAS officers, like that he expressed thermocole idea. It is optional and not compulsory. But DMK party used it to defame ADMK administration.


ram
மார் 19, 2025 04:22

உண்மைதானே... நீங்க செய்த செயல் அவ்வளவு சிறப்பான செயல்தானே... உமது அறிவுக்கூர்மைக்கான பட்டம் தானே இந்த தெர்மோகூல்..


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 01:17

முட்டையம்மா என்ன அதிமுகவா ??


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 22:24

ஆனா சும்மா சொல்லக்கூடாது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆயிட்டீங்க. தெர்மோகோல் விஞ்ஞானின்னு சீனா வரைக்கும் பேமஸ். அதிகாரிங்க உங்களை வைத்து காமெடி கீமடி கொத்து பரோட்டா பண்ணிட்டாங்க.


Suresh Sivakumar
மார் 18, 2025 21:24

Dmk are a bunch of thieves. Tirudargal munetra kazhagam


பாமரன்
மார் 18, 2025 20:21

நீர்நிலைகளில் வெப்பத்தில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் உபயோகித்தது மற்றும் செந்தில் பாலாஜி சொன்ன அணில் மின்தடைக்கு காரணம் இவை இரண்டும் விஞ்ஞான ரீதியாக நடப்பவைகள் தான்... என்ன, சொன்ன ஆட்களின் க்வாலிட்டி காரணமாக தமிழனுக்கே உரிய நக்கலுடன் ஓட்டுகிறோம்... இருபதாயிரம் பொஸ்தகம் படிச்சேன் ரெண்டு லட்சம் எஃப்ஐஆர் போட்டேன் டிஜிட்டல் கேமரா கண்டு புடிக்கும் முன்பே டிஜிட்டல் ஃபோட்டோ எடுத்தேன் ஈமெயில் வர்றதுக்கு முன்பே ஈமெயில் அனுப்பிச்சேன்... முத்தாய்ப்பாக டெல்லி யூனிவர்சிடில ஒரேயொரு நபர் படிச்ச பெஷல் பட்டம் வாங்குனேன்னு சொன்னதையெல்லாம் நம்புறவங்க இருக்கும் ஊரும் தானே இது...??


Arunkumar,Ramnad
மார் 18, 2025 20:59

அறிவாலய பக்கோடா பாமரா, இங்கு படித்த விபரம் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.எனவே எதையாவது அடிச்சி விடாதே.எல்லோரையும் உன்னைப் போன்று தத்தி என நினைத்து இங்கே கருத்தை பதிவிடாதே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை