உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்; பெயர் சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்; பெயர் சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: 'இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. தி.மு.க., என்பது ஆட்சிக்கு வர வேண்டும், பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது. இதற்கு பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்தோம். 1949ம் ஆண்டு துவங்கி, 1957ம் ஆண்டு தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வருவோம், நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நான் யார், எந்த கட்சி தலைவர் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் நான் அவர்களுக்கு எல்லாம் அடையாளம் காட்ட தயாராக இல்லை. இது தான் உண்மை. அவர்களின் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை. அந்த கட்சியோட பெயரை சொல்ல விரும்பவில்லை.

கோபம் வருகிறது!

தி.மு.க., என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. ஆவேசம் வரட்டும், கோபம் வரட்டும். மதத்தை மையமாக கவர்னர் பேசுவதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டேன். அவர் இருப்பதால் தான் தி.மு.க., இன்னும் வளர்கிறது. அடுத்த சட்டசபை கூட்டத்திற்கும் கவர்னர் வர வேண்டும். நாங்கள் கவர்னர் உரையை எடுத்து கொடுப்போம். அதனை அவர் படிக்காமல் செல்ல வேண்டும். மக்கள் அதனை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து கவர்னரை மாற்றவே வேண்டாம். அவரே கவர்னராக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சாதனை படைப்போம்

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம். சாதனை படைப்போம் வரலாறு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னதை முதல்வர் நிகழ்த்தி காட்டினார். தமிழகத்தின் அடையாளங்களை கவர்னர் அழிக்க முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தமிழ் உணர்வும், தன்மானமும் கொண்ட கட்சி தி.மு.க., எங்கிருந்து வந்துள்ளீர்கள் என்பது முக்கியமில்லை. எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து விட்டீர்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

sankar
ஜன 25, 2025 19:32

ஆனால் நாம் எப்படி... மஹா சன்னிதானம், சன்னிதானம், இளைய சன்னிதானம் இந்த ரீதியில்...


Bhaskaran
ஜன 25, 2025 19:16

விலை போன காம்ரேட்ஸ் ஆளே இல்லாமல் கட்சியை நடத்தும் சைக்கோ . கொட்டை எடுத்த புள்ளிகள்.மானமே இல்லாத காங்கிரஸ். இருக்கும்வரை திமுகவின் ராஜ்யம் தான்


saravanan
ஜன 25, 2025 10:54

கட்சியை துவங்குவதே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் தானே கட்சியை துவங்கி பத்தே மாதங்களில் ஆட்சியில் அமர்ந்தார் NTR. திமுகவிற்கு பதினெட்டு ஆண்டுகள் இன்று அணைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்ற கட்சியான பாஜக உருவாகி மத்தியில் ஆட்சியை கைப்பற்ற கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆக கட்சி தொடங்குவதே ஆட்சியமைக்கதான் என்பதும் அதில் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இருக்க வாய்பில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்


Murthy
ஜன 24, 2025 22:22

கட்சி துவங்கிதானே வருகிறார்கள்.... . பேக்கரி டீலிங்கில் கட்சியை அபகரிக்கவில்லையே .... . கோபாலபுர புற வாசல்வழியே வரலையே.....


Kannan
ஜன 24, 2025 22:01

பெரிய அளவில் போராட்டம் செய்த கட்சியே சரியில்லை என்றால் எந்த கட்சியும் புதிய கட்சியும் ஆட்சியை பிடுத்து விடும் என்று தெரியாதவரா .தி மு க வின் வாரிசுக்கும்udai , புதிய கட்சி vijayதொடங்கியவருக்கும் வித்யாசம் இல்லை என்பதை முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்


Saai Sundharamurthy AVK
ஜன 24, 2025 21:29

ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி தான் சரியான ஆளு !!! ஸ்டாலினின் பேச்சில் இருந்து தெரிவது என்னவென்றால், ரவி மட்டும் கவர்னராக இல்லையென்றால் தமிழகம் மோசமான நிலைக்கு சென்றிருக்கும் போல் தெரிகிறது. ஆகவே ஸ்டாலின், "தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம், தன்னுடைய ஆட்சியில் என்ன நடக்கிறது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்ன ? காவல்துறையின் தான்தோன்றித் தனம் போன்றவற்றையெல்லாம் ஜனநாயக ரீதியில் சிந்தித்து தன் பொறுப்பை உணர வேண்டும்.


தமிழன்
ஜன 24, 2025 21:10

அமைச்சர் உதயநிதியை நேரடியாக திட்ட முடியாமல் இப்படி பேசுகிறார் முதல்வர்.. ஆட்சியில் அதிகாரிகளுக்கு பயப்படுகிறார்.. வீட்டில் மகனுக்கு பயப்படுகிறார். ஒரு வீரம் இல்லாத கோழையா தமிழகத்தின் முதல்வர் என்று நினைத்து பார்த்தால்.. நமக்கே வீரம் வந்து விடும் போல.. அடுத்த முதல்வர் வேட்பாளர் நிச்சயமாக உதயநிதி இல்லை என்பது முதல்வர் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.


காலபைரவன்
ஜன 24, 2025 20:29

திராவிஷ ரவுடிகளின் மைண்ட் வாய்ஸ்: மண்டை மன்னனுக்குள்ள போற வரை நாங்க தான் கல்லா கட்டுவோம். மண்டை மன்னனுக்குள்ள போனபின் எங்க மகன், மகள், பேரன், பேத்தி எல்லாரும் கல்லா கட்டுவாங்க. இதுக்கு நடுவுல இவன் வேற புகுந்து .....


Ramesh Sargam
ஜன 24, 2025 20:27

ஒரு சிலர் அவர்கள் குடும்ப வாரிசுதான் அடுத்தடுத்து முதல்வர் பதவிக்கு வரவேண்டுமென்று துடிக்கிறார்கள்.


Nagarajan S
ஜன 24, 2025 20:22

சொல்ல மறந்தது: இதற்கு பிறகு படிப்படியாக பல ஆயிரம் கோடி சொத்து குவித்து வளர்ச்சி அடைந்தோம் குடும்ப ஆட்சியின் மூலமாக.


சமீபத்திய செய்தி