உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

கூட்டணியில் விரிசல் வராதா என காத்திருக்கின்றனர்: உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: 'பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ.,வும் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்து இருக்கிறார்கள்' என துணை முதல்வர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.தஞ்சாவூர் தொகுதி எம்.பி.,க்கான புதிய அலுவலகம், கருணாநிதி நுாலகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர் தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசியதாவது: நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதுவும் முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம் தான் கூறினார். அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். முதல்வர ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான்.

மகளிர் வளர்ச்சி

இந்தியாவில் தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டணியில் விரிசல்

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ.,வும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார்.

200 தொகுதிகள்

நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க.,வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அந்த ராசியின் படி உடனே நிறைவேறி விடும் என கூறினார்கள்.

தீர்மானம்

நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பிறகு அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதல்வராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல், அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தாமரை மலர்கிறது
நவ 07, 2024 23:46

சொந்த காலில் நடந்தால், யார் கவலைப்பட போகிறார்கள்? பத்து கட்சி தோளிலேறி சவாரி செய்தால், எப்ப நீ கீழ வருவ என்று எதிர்பார்ப்பது சரி தானே.


duruvasar
நவ 07, 2024 20:25

என்னங்க உல்டாவா பேசறீங்க. கூட்டணியில் விரிசல் விழக்கூடாது என்பதற்க்காக உங்க அம்மாதான் கோவில் கோவிலாக போய்வருகிறார் என்று பஜாரில் பேசிக்கொள்கிறார்களாம். பட்சிகள் பேசிகொல்லிறதாம்.


enkeyem
நவ 07, 2024 18:47

கூட்டணியில் விரிசல் வருவது ஒரு புறம் இருக்கட்டும். உன் கட்சி சீனியர்களை ஓரம் கட்டும் நிலையில் கட்சி விரிசல் வராமல் பார்த்துக்கொள்ளுங்க்ள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 07, 2024 18:44

இதுவரையில் உபிஸ் தான் அடிமைகள் என்று நினைத்திருந்தோம்.... ஆனால் இப்பொழுது புரிந்தது கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட திமுகவின் கொத்தடிமைகள் தானென்று.....!!!


Jay
நவ 07, 2024 18:37

சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவும் சீமானும் நேர்மையாக தேர்தலை சந்தித்து தலா 10 சதவிகிதற்கு மேல் ஓட்டு பெற்றனர். கோயம்புத்தூரில் அண்ணமலை 4 1/2 லட்சம் ஓட்டு பெற்றார். இந்தியாவையே ஆள்வதோடு மட்டும் அல்லாமல் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜகவினர் காசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களால் திமுக நினைக்க முடியாத அளவிற்கு காசு கொடுக்க முடியும். ஆனாலும் நேர்மையாக தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்துள்ளனர். திமுகவினரால் இதை செய்ய முடியுமா?


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 17:26

தனியா நில்லு என்கிற பிரிவினை வாதம் ஓவரா இருக்கு. கூட்டாக வாழ்கிற நான்கு எருதுகளை தனித்தனியாகப் பிரித்து அழித்த நரி கதை நினைவுக்கு வருகிறது.


சிவா. தொதநாடு.
நவ 07, 2024 16:02

இதெல்லாம் படித்து தொலைக்கனும்.... இதுதான் விதி .... அதாவது. கர்மா


Rengaraj
நவ 07, 2024 15:50

உதயநிதி விஷயத்தில் என்ன சொல்கிறாரோ அதற்கு எதிராகத்தான் நடக்கிறது. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார்.வந்தார். எம்.எல்.ஏ க்கு போட்டி போட மாட்டேன் என்றார். வென்றார். அமைச்சராக மாட்டேன் என்றார். ஆனார். துணை முதல்வர் பதவிக்கெல்லாம் ஆசைப்படும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை ம, ஆகமாட்டேன் என்றார். ஆகிவிட்டார். இப்போது கூட்டணியில் விரிசல் இல்லை, வராதா என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன என்கிறார். ஆகையால் கூட்டணியில் வி.ரி.ச.ல் தங்கள் ஊகத்துக்கே


Kadaparai Mani
நவ 07, 2024 15:49

எல்லா கட்சியும் தனியாக நின்றால் அதிமுக திமுகவை விட அதிகம் ஓட்டு வாங்கும் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற ஓட்டு சதவீதத்தை தனியாக நின்றால் திமுகவால் வாங்க முடியாது .சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் வேறுவிதமாக ஒட்டு போடுவார்கள் .சின்ன தத்திக்கு 1980 வருடம் மக்கள் எப்படி மூன்று மாதத்தில் பாராளுமண்றத்திற்கும் சட்டமன்றத்துக்கும் வேறு விதமாக வாக்கு அளித்தார்கள் என்ற வரலாறு தெரியாது .


vadivelu
நவ 07, 2024 14:40

எதற்கு கூட்டணி, நமக்கு பெருத்த ஆதரவு இருக்கே. இனி தனியே நின்று வெற்றியை பெறுவோம். இதுவல்லவோ பெருமை.


enkeyem
நவ 07, 2024 18:49

உண்மையிலேயே தில் இருந்தால் இந்த தேர்தலில் திமுக தனியாக நின்று போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை