உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்

அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்

திருப்பூர்,:திருப்பூரில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் ஜெயராமன் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை, மூடி மறைப்பதிலேயே, தி.மு.க., ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி, ஞானசேகரனுக்கு பின்னணியில் 'இன்னொருவர் இருக்கிறார்' என்று கூறியும், போலீஸ் நடவடிக்கை இல்லை. தி.மு.க., கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. அதிகாரத்தை அனுபவித்து, ஆதாயம் அடைய வேண்டும் என்று நினைப்பதாலேயே அமைதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !