உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"

துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: துப்பாக்கியை காட்டி, என் வாயில் வைத்து சுட்டுவிடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: https://www.youtube.com/embed/_5ggE04zWLMபோலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., இல்லாமல் விசாரித்தது போலீசாரின் அத்துமீறல். எப்.ஐ.ஆர்., இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள்? போலீசார், ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பட்டது.11 கட்டளைகள்உச்சநீதிமன்றம் வகுத்துள்ள 11 கட்டளைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம். அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.விழிப்புணர்வுபோலீஸ் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது. நான் இருந்தால் கூட இந்த போலீசாரின் போக்கு இப்படித்தான் இருக்கும். போலீசாருக்கு மனித உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அவசியம். மிரட்டினாங்கநானும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன். என்னை போலீசார் மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்கள். துப்பாக்கியை காட்டி என் வாயில் வைத்து சுட்டு விடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள். இது காவல் துறையின் ஒரு பயிற்சி முறையாக இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Narayanan
ஜூலை 03, 2025 16:33

போக்குவரத்து கந்துவட்டி போலீசாரின் கொடுமைகளும் வளர்ந்துவருகிறது.


Narayanan
ஜூலை 03, 2025 16:31

போலீசார் ஏன் அன்றே சுடவில்லை தமிழகமும் , அவரை சார்ந்து இருக்கும் மக்களும் பிழைத்திருப்பார்கள்


lakshmikanthan S.B
ஜூலை 03, 2025 07:55

தமிழ்நாடு தப்பித்து இருக்கும்.


theruvasagan
ஜூலை 02, 2025 22:33

பொத்தாம் பொதுவா போலீஸ் வாயில சுட்டு விடுவதாக மிரட்டினார்கள் என்றால் எப்படி. எப்ப நடந்தது. யார் ஆட்சியில் நடந்தது. அந்த போலீஸ் அதிகாரி யார். எந்த குற்றத்துக்காக அப்படி மிரட்டப்பட்டீர்கள். அந்த சம்பவத்தை மேலிடத்துக்கு பகார் செய்தீர்களா. இதற்கெல்லாம் பதில் தேவை..


Shankar
ஜூலை 02, 2025 21:32

நீ என்னதான் ஜால்ரா அடிச்சாலும் ரெண்டு சீட்டும் பிளாஸ்டிக் சேர் மட்டும் தான்.


Krishna Gurumoorthy
ஜூலை 02, 2025 21:15

பழைய கேஸ் ஏதாவது பென்டிங் இருக்குதா


sridhar
ஜூலை 02, 2025 20:47

வெறும் மிரட்டலோடு நின்ற போலீசார் கடமை தவறிவிட்டார்கள் , திருவாரூர் ரயில் பரிசோதகர் போல.


SIVA
ஜூலை 02, 2025 20:35

போலீஸ் எதையும் உருப்படியாக செய்வது இல்லை... நான் பொதுவா சொன்னேன் ...


எஸ் எஸ்
ஜூலை 02, 2025 19:44

என்ன சாமர்த்தியம்? கண்டித்த மாதிரியும் இருக்க வேண்டும் அதே சமயம் திமுக தலைமைக்கும் கோபம் வரக்கூடாது!


Ramesh Sargam
ஜூலை 02, 2025 21:29

இதுபோன்ற ஆட்களிடம் இருந்துதான் முதல்வர் ஸ்டாலின் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 02, 2025 19:39

போலீஸ் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது. தெரியுது இல்லை. தெரிஞ்சும் உங்கள் கூட்டணி முதல்வர் தன்னுடைய ஆட்சியில் அப்பட நடக்காமல் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம் இல்லை. ஏன் அப்படி செய்யவில்லை? ஒருவர் ஆட்சி அதிகாரத்தில், அதுவும் முதல்வர் என்கிற அதிகாரத்தில் இருக்கும்போது முன்பிருந்த தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால், பின் ஆட்சி போன பிறகு என்ன செய்யமுடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை