உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று முறிந்து போயினர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று முறிந்து போயினர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை: 'அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்று சிலர் முனை முறிந்து போயினர்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாகவே நான் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் பலரும், அவரவர் துறை சார்ந்த மற்றும் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திருந்தனர்.அதனை நானும் துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. நானும், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.எதிர்வரிசையிலே இருப்பவர்கள், திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N Sasikumar Yadhav
அக் 25, 2024 21:51

திராவிட மாடல் அரசுக்கு திருட்டு திமுக ஐடி விங்குதான் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது உடனடியாக தடைசெய்யுங்கள் திருட்டு திமுக ஐடி விங்கை


sankar
அக் 25, 2024 18:01

அணைத்து ஆர் எஸ் பி ஊடகங்களும் ஒத்து ஊதியும் பெயர் இவ்வளவு ரிப்பர்


Mani . V
அக் 25, 2024 13:45

பாட்டி: தம்பி மேக்கப்பு சூப்பர். பாட்டி மனதுக்குள், என்னை விட பத்து வயது மூத்தவர். எவ்வளவு இளமையாக இருக்கிறார்.


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2024 11:38

முதல்வரே , திருச்செந்தூரில் கஞ்சா குடிக்கிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெரும் ஹோட்டல் சிப்பந்திக்கு என்ன பதில் சொல்ல போறீங்க , கஞ்சா , மெத்து , சூடோ , ஹாஷிஷ் போன்றவற்றின் பயன்பாடு துணைமுதல்வர் பதவிக்கு வந்தபின்னர் அதிகரித்து உள்ளதாக ஒரு செய்தி பரவுதே , அதனை அவதூறு என்று நிரூபிக்க எல்லா கஞ்சா விற்பனையாளர்களும் தமிழகத்தை விட்டு ஓடிவிடும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பீர்களா


kantharvan
அக் 25, 2024 13:36

வேணும்னா வீட்டுல கொஞ்சம் வச்சு பாரு?? நீதான் தைரியம் உள்ள ஆளாச்சே ??


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2024 14:15

சரிங்க , இந்தாங்க 200


புதிய வீடியோ