உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு நேரம் மாற்ற மறுப்பு

திருச்செந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு நேரம் மாற்ற மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக நேரத்தை முகூர்த்த நேரமான பகல் 12:05 முதல் 12:45 மணி வரை மாற்ற உத்தரவிடக்கோரி, சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 'ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உரிய விசாரணையை நடத்தி மனுவை தள்ளுபடி செய்துள்ளதால் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை' எனக் கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர் -டில்லி சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 05, 2025 10:49

ஜோதிட வல்லுனர்கள் ஆகமம் கற்றவர்கள் நேரம் குறித்து கும்பாபிஷேகம் கோயில் விழாக்கள் நடைபெற்ற காலம் போய் அரசு அலுவலர்கள் கோர்ட் வக்கீல் நீதிபதிகள் சொல்லி கும்பாபிஷேகம் கோயில் விழாக்கள் நடைபெற வேண்டி நிலை. இந்து மதத்தவருக்கு மட்டும் ஏன் இந்த நிலை. கலி காலம்.


சந்திரசேகரன்,துறையூர்
ஜூன் 05, 2025 07:25

குடமுழுக்கு என்பது திராவிட விஷக் கிருமிகள் வைத்த பெயர். கும்பாபிஷேகம் என்பதே சரியான சொல்லாகும்.


crap
ஜூன் 05, 2025 08:56

கும்ப அபிஷேகத்தை ஓரளவு கலப்படமற்ற தமிழில் சொல்ல வேண்டுமென்றால் - கலச நன்னீராட்டு குடமுழுக்கு - அவ்வளவு சரியான பொருள் தராது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை