உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லா காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள்; பிரதமர் மோடி புகழாரம்

எல்லா காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள்; பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து, தமிழில் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.வள்ளுவரின் பக்தர் மோடி இதுகுறித்து கவர்னர் ரவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார்.இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. இவ்வாறு கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

venugopal s
ஜன 16, 2025 11:50

ஏதோ ஒன்று வேதம் ஓதுகிறது!


Palanisamy T
ஜன 17, 2025 06:44

திருக்குறளை இன்றும் உண்மைகள் சொல்லும் வேதநூலாக காண்கின்றேன். எங்கள் ஊருக்கு அன்று வருகைத் தந்த கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் குறளை பற்றி சொன்னவுண்மை இது. காலத்தால் நாம் இழந்த மறைந்துப் போன நான்கு தமிழ் வேதங்களான அறம் பொருள் இன்பம் வீடு பற்றி அவர் சொன்னதை இன்னும் மறக்கவில்லை. இன்று வேதங்களின் மறுத் தோற்றமாக அமைந்ததுதான் நம் குறள். மறைமலை அடிகளும் இதையே அன்று எழுதினார். குறள் அறிவியல் நூலாகவும் மெய்யறிவு நூலாகவும் வரையப் பட்டுள்ளது. பள்ளிப் பாடத்தில் அறிவியல் நூல் மேன்மக்கள் படிக்கும்போது அந்நூல் வேத நூலாகின்றது.


Palanisamy T
ஜன 16, 2025 11:30

உலகெங்கிலுமுள்ள நம் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பான இனிய வேண்டுகோள் திருக்குறளை போற்றும் வகையில் நாமும் பயனடையும் வகையில் குறளின் முதல் 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களை நம் சமயம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடக்க மங்களப் பாடலாய் பாடி, பின்பு மற்ற நிகழ்ச்சிகளை தொடரவேண்டுமாய் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நாம் தமிழர்களாக வாழ்ந்தாலும் இன்னும் தமிழர்களாக வாழவில்லை. இன்றும் உயர்வுதாழ்வு, பல்வேறு சாதிகள், தீண்டாமை போன்ற பிரிவினை பின்னடைவு தீயசக்திகளால் வெறும் அடையாளத்திற்காக மட்டும் நாம் தமிழர்களாக வாழ்கின்றோம். இதை மாற்றவேண்டும். இன்றைக்கும் கோயிலில் பாடப்படுகின்ற சிவபுராணம் இறப்பு நிகழ்ச்சிகளிலும் பாடுகின்றோம். சிவ புராணம் நமக்கு அப்படிப் பட்ட அரிய செய்திகளை உண்மைகளை இனிய தமிழால் வெளிப்படுத்துவதால் இன்று இதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். திருக்குறள் என்ற நூல் சாதி மதம் உயர்வுதாழ்வு தீண்டாமை போன்ற தீயசக்திகளை யெல்லாம் தாண்டி பொது நலனுக்காக இதுநாள்வரைக்கும் யாராலும் சொல்லமுடியாத நடைமுறைக்கு ஏற்ற உண்மைகளை நமக்கு சொல்லுகின்றது. நம்பிக்கையோடு பயணங்களை இனி மேற்க் கொள்வோம்.


J.Isaac
ஜன 16, 2025 08:03

ஓட்டுக்காக எப்படியெல்லாம் நடிக்க வேண்டியதிருக்கிறது


அப்பாவி
ஜன 15, 2025 20:25

கொள்கைகள் உலகத்துக்கே உலக அமைதிக்கே எதிரானது.


Ramesh Sargam
ஜன 15, 2025 20:24

ஒரு சிலர் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு பிரதமர் இப்படி செய்கிறார் என்று கருதலாம். மோடி அவர்கள் அப்படிப்பட்டவர் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைவிட, பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழின் மீதும், தமிழர்களின் மீது, பொதுவாக அனைத்து இந்தியர்களின் மீதும் ஒரு அக்கறை எப்பவுமே உண்டு. எல்லா காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள். எந்த காலத்துக்கும் பொருந்தாத திமுக.


GMM
ஜன 15, 2025 19:11

திருவள்ளுவர், கம்பர் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத நெசவு தொழிலை தேர்வு செய்தவர்கள். பாரதத்தில் சில சமூக மக்களிடம் தான் குல தொழிலாக இருந்தது. பத்தினியுடன் இல்லறம் புரிந்தவர்கள். நாம் வாழும் காலத்தில் கவிஞர் கண்ண தாசன் சரளமாக பல ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளார். அப்படி என்றால் குறள் ஓவியம் பலரால், எழுத பட்டதா? தனி மனித ஞானம் அப்பாவி மக்களுக்கு புரியாது.


Svs Yaadum oore
ஜன 15, 2025 18:35

திருக்குறள் 5 -6 ம் நூற்றாண்டு , அல்லது அதற்கு முந்திய நூற்றாண்டு பிந்தைய நூற்றாண்டு என்று எப்படியோ இருக்கட்டும் ...அது பிரச்சனை இல்லை ....ஆனால் திருவள்ளுவர் காவி ..கவர்னர் பதிவு செய்த காவிதான் வள்ளுவர் ..வள்ளுவர் 64 வது நாயன்மார் ..இதை எந்த கொம்பனும் மாற்ற முடியாது ..வள்ளுவர் வெள்ளை துண்டு மேய்ப்பர் கிடையாது ...


Palanisamy T
ஜன 15, 2025 17:46

எந்த ஊரில் மக்கள் அறநெறி வாழ்வு கலாச்சாரத்திற்கு மரியாதைக் கொடுக்கின்றார்களோ அந்தவூர் என்றும் வலிமையாயிருக்கும் நல்லாயிருக்கும். திருக்குறள் நூல் நாளைய இந்தியாவிற்கு நன்றாய் பொருந்தும். என்றும் ஒன்று பட்ட வலிமையான இந்தியா, ஆகையால் மோடி அவர்களே திருக்குறள் நூலை இந்திய நாட்டின் தேசியநூலாக உங்கள் காலத்திலாவது நீங்கள் அறிவிக்க வேண்டும். வெறும் பேச்சாக அந்நூலை புகழ்ந்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை


அப்பாவி
ஜன 15, 2025 16:50

திருக்குறள் 5 -6 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜீ அடிச்சு உடற மாதிரி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்படவில்லை. அந்தக் கதையெல்லாம் ராமாயணம், மகாபரதத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.


Barakat Ali
ஜன 15, 2025 17:16

கதறிக் கதறி பொசுக்குன்னு


Kasimani Baskaran
ஜன 15, 2025 17:28

அள்ளி விடு... காசா பணமா.


அப்பாவி
ஜன 15, 2025 16:47

முதலில்.இண்ணு தெரிஞ்சுக்கோங்க. திருவக்ளுவர் சொந்தமா ஒண்ணும் எழுதவில்லை. அவர் காலத்தில் இருந்த நீதி நூல்களின் கருத்துக்களை எடுத்து இரண்டடி வடிவமாய் கொடுத்தார். பதிணென் கீழ்க் கணக்கின் பிற நூல்களைப் பார்த்தால், முக்கியமாக நாலடியார் நூலில் உள்ள கருத்துக்கள் இரண்டடியில் சொல்லப் பட்டுள்ளன. மேலும் வள்ளுவர் காலத்தில் மன்னராட்சி நிலவியது. மக்களாட்சி கிடையாது. எனவே எக்காலத்திற்கும் பொருந்தும்னு உருட்ட வாணாம். பீ ப்ராக்டிகல்.


சமீபத்திய செய்தி