உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேமுதிகவை இழுக்கும் பணியில் திருமா; அதிமுகவை அலெர்ட் செய்த பாஜ மேலிடம்

தேமுதிகவை இழுக்கும் பணியில் திருமா; அதிமுகவை அலெர்ட் செய்த பாஜ மேலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக - பாஜ ஈடுபட்டுள்ளன. இதற்கான ஆலோசனைகளை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு பாஜ தெரிவித்து வருகிறது. தேமுதிக தலைமையுடன் பழனிசாமி ஏற்கனவே பேச்சு நடத்தினார்.தேமுதிக தரப்பில் வைக்கப்பட்ட இரட்டை இலக்க தொகுதிகள், ராஜ்யசபா எம்பி ஆகிய கோரிக்கைகளை அதிமுக ஏற்றாலும், 'மத்திய அமைச்சர் பதவி' கோரிக்கையை பாஜ பக்கம் திருப்பிவிட்டது. எனவே, தேமுதிக தலைமையை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார். அப்போது, விஜயபிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி தருமாறு கேட்டுள்ளனர். 'உங்களின் கோரிக்கை தேர்தலுக்கு பின் நிறைவேற்றப்படும்' என, பியுஷ் கோயல் உறுதி அளித்தும் தேமுதிக ஏற்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cb8q53ug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், மதுராந்தகத்தில் கடந்த 23ம் தேதி நடந்த பிரதமர் மோடி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை. இதற்கிடையே, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்ததால், தேஜ கூட்டணி பலமானதைத் தொடர்ந்து, தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க., மேலிடம் தீவிரம் காட்டியது.அமைச்சர் வேலு வாயிலாக நேரடியாக பேச்சு நடத்திய நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளை தி.மு.க., களம் இறக்கி உள்ளது. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமானவர்களிடம், சென்னை அசோக்நகரில் கடந்த 24ம் தேதி இரவு, கூட்டணி தொடர்பாக நீண்ட நேரம் பேச்சு நடத்தி உள்ளார்.அப்போது, 'தனக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பா.ஜ., கூட்டணியில் பழனிசாமி உள்ளார். அது அவருக்கு எதிராக முடியும். அந்த தவறை தே.மு.தி.க., செய்யக்கூடாது. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தொகுதி குறைவாக இருந்தாலும் நிச்சயம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, பொதுச்செயலர் பிரேமலதாவிடம் தெரிவித்து பதில் அளிப்பதாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த தகவல்களை மத்திய உளவுப்பிரிவு போலீசார் வாயிலாக தெரிந்து கொண்ட பா.ஜ., மேலிடம், அ.தி.மு.க., தலைமையிடம் தெரிவித்து உஷார்படுத்தியுள்ளது.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தலைமையும், தே.மு.தி.க., தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசி, கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை கொண்டு வர, பல வழிகளிலும் முயற்சி நடக்கிறது. விரைவில் முடிவு தெரியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Rathna
ஜன 28, 2026 16:38

யாருதான் மத்திய அமைச்சர் என்பதற்கு ஒரு வரைமுறை இல்லையா? என்னப்ப நடக்குது நாட்டில? பெட்டி கட்சிகளை மக்கள் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் நேர ஊழல் பெருகி, நம் நாட்டையே செல் அரித்து விடும்.


RAVINDRAN.G
ஜன 28, 2026 16:02

தேமுதிக கட்சியை யாரும் கூட்டணியில் சேர்க்காதீர்கள். தனியா நின்னு டெபாசிட் வாங்காம போகட்டும். 1% கீழ் ஓட்டு வாங்கி வைத்து இருக்கும் தேமுதிக வை யார் ஆதரிப்பார்கள்? இருந்தாலும் பிரேமலதாவும் பேராசைதான். இதுல எம் பி சீட்டு மற்றும் மந்திரி பதவி. ரொம்பதான் ரவுசு விடுறாங்க.


angbu ganesh
ஜன 28, 2026 14:33

இவன் ஒரு இதுபோனவன் தேதிமுக ஒரு செத்துப்போன கட்சி


தாரகவாசன்
ஜன 28, 2026 13:42

ஏலத்தில் அதிக தொகை கேட்டிருக்கிறார்.


JANA VEL
ஜன 28, 2026 13:25

தேமுதிக, திருமா ரெண்டுமே இதுக்கு சரிப்பட்டு வராது.


V K
ஜன 28, 2026 12:49

இப்போ திமுக என்ன செய்கிறது


Haja Kuthubdeen
ஜன 28, 2026 12:10

மத்திய அமைச்சர் எம்பி சீட் இதெல்லாம் திமுகவால் சாத்தியமே இல்லாத ஒன்று...அதான் நிதர்சனம்.மேலும் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடும் தேமுதிக எதிர்பார்ப்பு நிச்சயமா கிடையாது.6அல்லது 7 கொடுத்தால் கூட ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகள் தொகுதி அதிகம் கேட்கும் அபாயம்.தேமுதிக ஒர்த் இல்லையென்றாலும் அவர்கள் இந்த சமயத்தில்தான் விளையாடுவார்கள்.பலமா இருக்கோம் என்று சொல்லும் திமுக ..தேமுதிக..ஓப்பீஸ்..ராமதாஸ் என்று அவர்களை நோக்கி எதற்கு நகர்கிறது...அவர்கள் கேட்கும் தொகுதி கொடுக்க திமுகவில் இடம் இருக்கா???


duruvasar
ஜன 28, 2026 11:52

தன்னைப்பற்றிய விளம்பரம் தினம் தினம் ஊடகங்களில் வரவேண்டும் என்பதர்காகவே தினமும் ஒரு பிதற்றலை வெளிப்படுத்துகிறார்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 28, 2026 10:59

இவர்களை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. தேமுதிகவிடம் கெஞ்சும் நிலையில் இருப்பதை பார்த்தால் அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. விஜயகாந்த் என்ற நல்ல மனிதரோடு தேமுதிகவின் அரசியல் முடிந்துவிட்டது. பிரேமலதா போன்றவர்கள் நடத்தும் பேரங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை. தேமுதிக போன்ற 1 சதவீதம் கூட வாக்குவங்கி இல்லாத கட்சிக்கு இவ்வளவு டிமாண்ட் தேவையற்றது. தன்னால் நிறைய லெட்டர் பேட் கட்சிகள் நாட்டில் பெருகி வருகின்றன. தேமுதிக சும்மா விட்டால் போதும் அவர்களுடைய கட்சி இந்த தேர்தலோடு காணாமல் போகும்.


Gopinathan S
ஜன 28, 2026 10:46

ஒரு சதவீதம் ஒட்டு கூட இல்லாத கட்சிக்கு இவ்வளவு டிமாண்ட் எப்படின்னு புரியவே இல்லை


முக்கிய வீடியோ