உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் அப்படி சொல்லவில்லை; திராவிடம்-தமிழினம் குறித்து திருமா புது விளக்கம்

சீமான் அப்படி சொல்லவில்லை; திராவிடம்-தமிழினம் குறித்து திருமா புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி, வி.சி.க., மீது திட்டமிட்டே அவதூறு பரப்புவதாக வி.சி.க., தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=30nhwtmt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்தை எடுத்து விடுவேன் என்று சீமான் சொல்லவில்லை. அதுக்கு பதிலாக இன்னும் ஒரு சிறப்பான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்கிறார். அவருக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால், அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளே இருக்கும் பல்வேறு தேசிய இனத்தில் ஒன்று தான் தமிழ் இனம். அதனை வெவ்வேறு படுத்தி பார்க்கக் கூடாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ் தான், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு தான். திராவிடத்தை பாதுகாப்போம் என்றால் தமிழகத்தையும், தமிழர்களையும் பாதுகாப்பது என்பது தான் பொருள் என்று அவரே பல கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத காலகட்டத்தில் தென்னிந்திய மொழிகளை அடையாளம் கண்டு, திராவிட நிலம் என்று நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு திராவிடம் தான் என்று பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு. திராவிட கட்சிகளுக்கு முன்னால், திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இதை நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. எல்.முருகன் அருந்ததியர் என்பதே, ஆர்.எஸ்.எஸ்., சொல்லித்தான் தெரியும். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் எனக் காட்டிக் கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களில் ஈடுபாடு காட்டியதில்லை. அருந்ததியர்களின் உரிமைக்காக அவர் போராடியதும் இல்லை. படிக்கும் காலத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., இணைந்து செயல்பட்டு வந்தார்.அருந்ததியரின் இடஒதுக்கீடு மற்றும் போராட்டங்களில் பங்கேற்றதில்லை. தமிழகத்தில் அருந்ததியருக்கும், எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியது முதல் அருந்ததியர்களின் நலனுக்காகவே போராடி வருகிறது. வி.சி.க., மீது பொறாமை கொண்டவர்கள் திட்டமிட்டே, வதந்திகளை பரப்புகின்றனர். வி.சி.க., சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. மீண்டும் மீண்டும், வதந்தி பரப்புகின்றனர். இது அநாகரிமான அரசியல். உள்ஒதுக்கீட்டை எதிர்த்து பேசும் எந்த அமைப்பையும் இவர்கள் கண்டிப்பதில்லை. இடஒதுக்கீட்டை ஆதரித்த ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி, வி.சி.க., மீது திட்டமிட்டே அவதூறு பரப்புகின்றனர், எனக் குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

RAMESH
அக் 22, 2024 08:16

சீமான் ஜாக்கிரதை....வெருமா வசூல் மாமா


Balasubramanian Sundaram
அக் 22, 2024 02:58

பாட்டையே சாதகமாக மலையாளம் துளு எடுத்துவிட்டு பாடறாங்க திராவிடம் எனபது இந்தியரகளை குறிக்கும் ஆரியரகள் என்பது மாக்ஸ் முல்லர் உருவாக்க்குயது. நமக்கு வெள்ளை தோல் சொன்னால் தேவ வாக்க்கு இதையே பேசி அழிந்தோம் பாலா நியு் யார்க


saravanan
அக் 21, 2024 23:18

இட ஒதுக்கீட்டை ஆதரித்த ஒரு இயக்கம் விசிகா சபாஷ் என்ன ஒரு நல்ல எண்ணம். ஒரு சின்ன பின்னோக்கிய பார்வை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல் சாதி என்று கூறப்படும் வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மோடிஜி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய போது அதை எதிர்த்தது மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்த இந்த சீராளனை என்னவென்று சொல்வது


Nagarajan S
அக் 21, 2024 20:13

பாரதி தாசன் தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அதனால் தமிழகம் திராவிடநாடு என்று கூறியதில் வியப்பொன்றும் இல்லையே?


Nallavanaga Viruppam
அக் 21, 2024 17:27

நீங்க எதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கலாம். துணை மத்திய அமைச்சர் பதவியை கொடுத்திருக்கும் பிஜேபி எங்கே? அவர்களை வைத்தே அரசியல் செய்யும் நீங்கள் எங்கே? காலத்திற்கும் அடுத்தவன் வாயை பார்த்துக்கொண்டே பொய் சேர வேண்டியதுதான்.


saiprakash
அக் 21, 2024 16:10

அனைவரும் உத்திரப்பிரதேசம் செல்லவும்


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 15:11

திருமா... ஆட்றா ராமா.. சீமான் மாமா வீட்டுக்கு எப்படி காவடி எடுக்கணும்.. திருமா..


kulandai kannan
அக் 21, 2024 14:17

கைபர் போலன் வழியாக யார் வந்தார்களோ இல்லையோ, பல ம நூற்றுகளுக்கு முன்னர் பசி, பட்டினி, கொள்ளை நோய்களுக்கு அஞ்சி ஆப்பிரிக்காவிலிருந்து கள்ளத்தோணியில் வந்த பெருங்கூட்டம் தென்னிந்தியா முழுதும் வியாபித்திருக்கிறது.


Ramaswamy Jayaraman
அக் 21, 2024 15:09

எனக்கு இது புதிய செய்தி


kulandai kannan
அக் 21, 2024 14:13

தமிழக அரசியல் தற்குறிகளெல்லாம் மானுடவியல் நிபுணர்கள்.


Sivagiri
அக் 21, 2024 14:03

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை