உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிய 2 நிர்வாகிகள் திருமாவளவன் நீக்கம்

நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிய 2 நிர்வாகிகள் திருமாவளவன் நீக்கம்

சென்னை:இரு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பேசிய, இரண்டு நிர்வாகிகளை, மூன்று மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை:கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில், வி.சி., கொடிக் கம்பத்தை அறுத்தெறிந்து, ஜாதி மோதல் போக்கை ஏற்படுத்திய சக்திகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, 4ம் தேதி புவனகிரியில் வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் லோக்சபா தொகுதி செயலர் செல்லப்பன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச் செயலர் செல்வி முருகன் ஆகியோர், போலீஸ் துறையை கண்டிக்கும் ஆவேசத்தில், கட்சியின் நன் மதிப்புக்கும், இரு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் பேசியுள்ளனர். எனவே, அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து மூன்று மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ