உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் வழக்கு; கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

திருப்பரங்குன்றம் வழக்கு; கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா விற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்தார்.திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும், என மனு செய்தார்.திருப்பரங்குன்றம் ஒசீர் கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனு செய்தார்.விழுப்புரம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், 'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. மலையை சமணர் குன்றாக அறிவிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் ஜெ .நிஷா பானு , எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை நீதிபதி ஸ்ரீமதி எடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

manu putthiran
ஜூன் 24, 2025 20:34

எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்து விட்டால் எப்படி மேற்கொண்டு வேறு ஒரு நீதிபதி விசாரிக்க முடியும்?


Ramesh Sargam
ஜூன் 24, 2025 19:54

திருப்பரங்குன்றம் வழக்கு. இது ஒரு தேவையற்ற வழக்கு. பூமி தோன்றியதில் இருந்து அந்த மலை முருகன் மலைதான். ஹிந்துக்கள் மலைதான். ஒரு சில பொறம்போக்கு waste land அரசியல் கட்சிகள் அந்த அமைதி மார்கத்தினரின் வாக்குக்காக அதில் அவர்கள் ஊடுருவ வாய்ப்பு அளித்தது. நீதிமன்றம் இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து அந்த மலை ஹிந்துக்களுக்கே என்று ஆணை பிறப்பிக்கவேண்டும். அங்கு ஆக்கிரமித்துள்ள வேற்றுமதத்தவர்களை உடனே அங்கிருந்து கிளப்பவேண்டும்.


GMM
ஜூன் 24, 2025 17:52

திருப்பரங்குன்றம் பல நூறாண்டுகளுக்கு முன் இன்று வரை முருக பக்தர்கள் கோவில். மலையில் குறுகிய காலத்தில் கிருத்துவ அல்லது இஸ்லாமியர் சிறு பகுதியை சில காலம் ஆக்கிரமிக்க பட்டு இருக்கலாம். இதன் காரணமாக உரிமை கோர முடியாது. கோவில் அருகில் மரண சமாதி கூடாது. தெய்வம் சக்தியை இழக்கும். நீதிமன்றம் அகற்ற தீர்வு சொல்வது சமூக உறவு வளரும்.


தமிழ்வேள்
ஜூன் 24, 2025 17:14

நமக்கு எதற்கு வம்பு என்று நீதியரசி நிஷா பானு வழக்கு மனுக்களை ஒட்டுமொத்த தள்ளுபடி செய்துவிட்டார் போல ...கொலையான சிக்கந்தரின் சமாதி இருப்பது கோரிப்பாளையம் சிக்கந்தர் பள்ளிவாசல் மையவாடியில் ..அப்படி இருக்க வெறும் பாறைகள் நிறைந்த மலை உச்சியில் , மண்ணற்ற ஒரு இடத்தில் , உடல் புதைக்கப்பட்டிருக்க இயலும் ? திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியர்களுடையது அல்ல ..


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 16:49

ஒரே சிக்கந்தருக்கு நகருக்குள் ஒன்று குன்றத்தில் ஒன்று என இரண்டு சமாதிகளா? ஒரே மனிதருக்கு இரண்டு உடல்களா? நம்பலாமா? அது சரி. ஏக இறைவன் தன்னைத்தவிர வேறு எவரையும் வணங்ககூடாது என கட்டளையிட்டாரே.. அதில் இந்த சிக்கந்தருக்கு மட்டும் விதிவிலக்கா?


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2025 16:42

நீதி என்றால் என்ன பதி என்றால் என்ன நீதி சொல்வதில் தலைமை இடத்தில் உள்ளவர் என்று உண்மையான பொருள் ஆனால் இப்போது இருப்பவர்கள் அநீதி பதி அல்லது நீதி பாதி அநீதி பாதி என்றே அழைக்கப்படவேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது அவர்களின் ஒவ்வொரு கருத்தும் அவர்கள் வழக்கு தீர்வு வழங்கும் முறையும் நேரமும்


முக்கிய வீடியோ