உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி எச்சரிக்கை  

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி எச்சரிக்கை  

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். ஹிந்துக்களின் இந்த புனிதத்தலம் உள்ள மலை, முருகன் குன்றம் என்று அகநானுாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற பக்தி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது.மலை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்னை வந்தபோது, 'மலை முழுதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் நீண்ட காலமாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால், 1996ம் ஆண்டு, ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.வழக்கை விசாரித்த ஐகோர்ட், குன்றில் உள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தற்போது எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்துாரி செய்வோம் எனவும், கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

veera
ஜன 10, 2025 15:48

மறுபடியும் vaigu கோமாவில் இருப்பாரு


Natchimuthu Chithiraisamy
ஜன 10, 2025 14:00

ஜேம்ஸ் யை தெரிந்த வைகுண்டுக்கு கோவில் முன்பு பெரிய வாசகம் உண்மையான கடவுள் ஏசு என்பது தெரியவில்லையா ? அந்த வாசக கட்டிடம் கட்ட அரசிடம் எப்படி இடம் வாங்கினார்கள் ஜேம்ஸ் ஆளுங்க ?


ghee
ஜன 10, 2025 11:49

மணிப்பூரில் கூட பிரச்சினை இருக்கு....james டிரைவரை கூப்பிட்டு அங்கயும் ஒரு எட்டு.போயிட்டு வந்துடுங்க


CECIL KALLADAI
ஜன 10, 2025 11:39

உண்மையான பெயரில் முதலில் பதிவிடவும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 10, 2025 11:09

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த சிக்கந்தர் ஷா தர்கா. இங்கே கடா வெட்டப் போறோம் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். முஸ்லிம்கள் அவிங்க உண்டு அவிங்க வேலை உண்டு என்று பேசாம அமைதியா தான் போறாங்க, வர்றாங்க. 2 வாரம் முன்னால்தான் திருப்பரங்குன்றம் போயிருந்தோம். Cab டிரைவர் ஜேம்ஸ்,. எல்லா கோவில்கள், நல்ல உணவகம், ஷாப்பிங் சென்டர்கள், எல்லாம் கூட்டிட்டு போனார். இந்த காடேஸ்வரா, தன் பெயர் பேப்பரில் வர வேண்டும் என்பதற்காக இப்படி ஏதோ அள்ளி வுடறார்.


veera
ஜன 10, 2025 11:44

இந்த வைகுண்டம் எப்படி எல்லாம் கம்பி கட்ரா கதை சொல்றாரு பாருங்க...அங்கே போனாராம். டிரைவர் பேரு james...........இதே மாறி முன்னாடி GST officer சொன்னா. அப்புறம்.gazetted ஆபீசர் சொன்ன....யாப்பா எவளோ புருடா


veera
ஜன 10, 2025 11:46

வைகு ....வாய திறந்த ஒரே பீலா தான்....நம்பாதீங்க...


Mettai* Tamil
ஜன 10, 2025 11:52

முஸ்லிம்கள் அவிங்க உண்டு அவிங்க வேலை உண்டு என்று பேசாம அமைதியா தான் போறாங்க, வர்றாங்க. ன்னு சொல்றிங்களே அந்த, அவிங்க வேலைய ஆரம்பிக்கிறதால தான் இந்த காடேஸ்வரா குப்பை சேர்த்திருமே ன்னு அள்ளி வுடறார்......


ஆரூர் ரங்
ஜன 10, 2025 12:27

அப்போ சிலிண்டர் அவங்க வேலையில்லை . கைதானவர்கள் வேறு?.


கிஜன்
ஜன 10, 2025 10:56

அகில உலக இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பே இருக்காது ....


Annamalai Annamalai
ஜன 10, 2025 20:40

உண்மைதான்


K.SANTHANAM
ஜன 10, 2025 10:52

மத்திய அரசு தூங்கியது போதும்..வீறு கொண்டு எழு..


V வைகுண்டேஸ்வரன்
ஜன 10, 2025 10:45

வா தல... அடிச்சு வுடு... அடுத்தது யார் பா??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:34

படித்தவனோ, படிக்காதவனோ எந்த கவுரவமும் பார்க்காமல் பிள்ளை குட்டிகளுடன் தெருவுக்கு வந்து போராடுவார்கள் ..... நாம் அப்படியா ????


Kumaresan Subramanian
ஜன 10, 2025 10:28

புதிதாக மலை மேல் கட்டப்பட்டுள்ள தர்கா வை அகற்ற நடவடிக்கை வேணும். கேரள முஸ்லீம்கள் தான் அதிகம் வருகிறார்கள். திருப்பரங்குன்ற கோவிலை நோக்கி ஒலி பெருக்கியை வைத்து ஒதுகிறார்கள். அன்றாடம் மதரசா பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வந்து மலை மேல் செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.


முக்கிய வீடியோ