உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவள்ளுவர் தினம்: பிரதமர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

திருவள்ளுவர் தினம்: பிரதமர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 'சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளுவர்' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோர் திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.

கவர்னர் ரவி

திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழகத்தில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழகத்தில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!.

அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்

திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள். விவேகம் நிறைந்த கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவர், மரபு மற்றும் மனித வாழ்வில் தெய்வீகத்தை தூண்டுவதோடு, பல யுகங்களுக்கு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் தூண்டுகிறார். திருவள்ளுவர் அவர்கள் எழுதிய திருக்குறள் உலக நலனுக்கானது. இன்றைய பாரதத்தின் கலாச்சார ஞானத்தின் சான்றாகவும் இது கருதப்படுகிறது. திருக்குறள் நமக்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 17, 2024 08:33

திருவள்ளுவர் எப்போது காவி உடை அணிந்தார்.? தமிழக பேருந்துகளில் உள்ள படங்களில் வெள்ளை உடையுடன் தானே காணப்படுகிறார்?


Ramesh Sargam
ஜன 17, 2024 00:09

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். - அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். தினம் ஒரு திருக்குறள் படிப்போம். அதன்படி நம் வாழ்க்கையை வாழ்வோம்.


Palanisamy T
ஜன 16, 2024 22:26

1. வெறும் வாழ்த்துமட்டும் சொன்னால் போதாது. மத்திய அரசு அந்நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். தமிழக மக்கள் மற்றும்.கவர்னர் அவர்களின் ஒத்துழைப்போடு மத்திய.அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். அந்நூலில் சொல்லப்பட்ட அறச் சிந்தனைகள் அனைத்தும் முழுவதுமாய் இடம் பெற்றுள்ளது. இப்படிப் பட்டவொரு நூல் வேறெங்கு மில்லை. இல்லையென்றால் வாழ்த்துக் களென்பது வெறும் வாய்ச் சொல்லாகவும் வாய்முகூர்த்தமாகவும் அமைந்துவிடும்.


T.sthivinayagam
ஜன 16, 2024 21:10

ஆளுனரின் இந்த செயலுக்கு மண்மக்கள் தலைவர்கள் என்ன பதில் சொல்வார் என்று தமிழ் சமுதாய மக்கள் கேட்கின்றனர்


T.sthivinayagam
ஜன 16, 2024 18:40

ஆலயங்களில் ஜாதியை தினித்தவர்கள் இப்போது மகானையும் உடை மாற்றி வளக்க நினைப்பவர்கள் நிறைந்த நாடா


Premanathan S
ஜன 16, 2024 17:13

"வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி."-முதல்வர் பேச்சு.. கறைபடுத்துபவர்கள் யார்? மக்களுக்கு நன்றாகத் தெரியும்.


அப்புசாமி
ஜன 16, 2024 17:07

பா.ஹ வின் தமிழ் டூல் கிட் சூப்பரா வேலை செய்யுது.


DVRR
ஜன 16, 2024 16:36

மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள் என்றால் வெகு சிலருக்குத்தானே புரியும் இவர் திருக்குறள். இப்போது இருப்பது மனித இனம் வெறும் 1% மற்றவர் மனித உருவில் இருக்கும் அடிமை மிருக ஜென்மம். அதுவும் முக்கியமாக தமிழ்நாடு என்று 1967க்கு முன் இருந்த இப்போது டாஸ்மாக்னாடு என்று நாசமான குடிகாரர்கள், காசு கொடு வோட்டு உனக்கே என்னும் குலம் உள்ள நாடு இது, இதில் இவர்களுக்கு திருவள்ளுவர், திருக்குறள் எப்படி புரியும்


பிரேம்ஜி
ஜன 16, 2024 16:51

அருமை. உண்மையை உரக்கச் சொல்லி விட்டீர்கள். இன்று முதல் டுமிளர்களின் முதல் எதிரி நீங்கள்.


DVRR
ஜன 16, 2024 16:23

எனக்கு வந்த வாட்ஸாப்ப் : 1) இறைவன் மனிதனுக்கு சொன்னது - பகவத் கீதை 2) மனிதன் இறைவனுக்கு சொன்னது - திருவாசகம் 3) மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள். ஒரே வார்த்தையில் முழூ அர்த்தம்


Barakat Ali
ஜன 16, 2024 21:19

அனைவரும் அறிந்ததுதான் ......


Rajarajan
ஜன 16, 2024 15:38

கடவுளை பற்றி தனது திருக்குறளில் குறிப்பிட்டுள்ள காரணத்தால், திருவள்ளுவர் ஹிந்து மதத்தை சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சார்ந்தவராக தான் இருக்க முடியும். அந்த பிரிவினரை தான் திராவிட பிரிவு அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதே, பிறகு திரு. ஸ்டாலின் ஏன் உணர்ச்சிவசபடவேண்டும் ?? உண்மையில் திராவிட அரசியல்வாதிகள், திரு. ஸ்டாலின் உட்பட கண்டிக்க வேண்டியது, அவர்கள் போற்றி கொண்டாடும் திராவிட ராஜகுரு ராமசாமியை தான். அவர்தான் திருக்குறளை, தங்கத்தட்டில் வைத்த மலம் என்று மிக மிக உயர்வாக கூறினார். தகவல் இங்கே, கண்டிப்பு எங்கே ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை