உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாவடுதுறை ஆதீன பட்டண பிரவேசம் கோலாகலம்

திருவாவடுதுறை ஆதீன பட்டண பிரவேசம் கோலாகலம்

மயிலாடுதுறை:திருவாவடுதுறை ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற பட்டண பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருமகா சன்னிதானத்தை தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீனத்தை14ம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் நமச்சிவாய மூர்த்திகள். அவரது குருபூஜை விழா தை - அசுவதியான இன்று காலை தோத்திரப் பாடல் பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனை அடுத்து நாதஸ்வர வித்துவான் கார்த்திக் பணியை பாராட்டி நாதஸ்வர கலாநிதி எனும் விருதும், தவிலிசை வித்வான் நடராஜன் பணியை பாராட்டி தமிழிசை திலகம் எனும் விருதும், திருச்சி சொக்கலிங்க ஓதுவார், கல்லிடைக்குறிச்சி சிவசங்கர் ஓதுவார் ஆகியோரின் திருமுறை பணிகளைப் பாராட்டியும், மதுரை ஞானப்பூங்கோதை, விக்கிரமசிங்கபுரம் சண்முகம் ஆகியோரின் சைவ சித்தாந்த பணிகளை பாராட்டி ஆதீன சைவ சித்தாந்த அறிஞர் எனும் விருதும், தலா ரூ.5 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்ந்து கவிராட்சச கச்சியப்ப முனிவர் அருளிய திருவானைக்காப் புராணம் மூலமும், உரையும் எனும் நூலை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள்ள முதல் பிரதியை செங்கோல் ஆதீனம்103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், சிவபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள்,வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீன இளவரசு சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான், வேலப்ப தம்பிரான், அருணாச்சல தம்பிரான் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம் பிரதிநிதிகள் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் ஆதீன கோயில்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மதியம் மாகேஸ்வர பூஜை நடந்தது.மாலை திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின வீணை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் கோமுக்தீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடந்தது. பின்னர் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பாரதி, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மதுமிதா ஆகியோருக்கு அருட்கொடை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம், பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார். தொடர்ந்து, பல்லக்கின் முன்னே குதிரைகள் ஆட்டத்துடன், வான வேடிக்கை முழங்க, பக்தர்கள் பல்லக்கினை சுமந்து செல்ல பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.நிறைவாக திருமடத்தின் கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சியும் நடந்தது.பட்டணப்பிரவேசத்தை முன்னிட்டு மயிலாடுதுறை எஸ்பி. மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nalla
ஜன 19, 2024 14:47

மனிதனை மனிதன் சுமப்பதை தடை செய்ய வேண்டும்


தமிழ்வேள்
ஜன 19, 2024 15:38

குரு என்பவர் சராசரி மனிதனிலும் மேம்பட்டவர் ...தங்கள் குரு பக்தியின் அடையாளமாக பக்தர்கள் சுமந்து செல்வது தவறல்ல .... பிறர் அதை விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை


அப்புசாமி
ஜன 19, 2024 07:39

நிதி சால சுகமா? ராமுனி சந்நிதி சேவ சுகமா?


அப்புசாமி
ஜன 19, 2024 07:37

அண்ணாமலையார் இங்கே பிசி


karupanasamy
ஜன 19, 2024 07:20

ராமசாமி நாயக்கப்பயல் முசுலீம்களின் பொதுக்கூட்டத்தில் பிரியாணியில் இருக்கும் கறிதுண்டிற்க்காக மற்ற மதங்களை இழிவு படுத்திப்பேசுவான். ஒருசமயம் பிரியாணியில் கறிதுண்டு சிறியதாக இருந்ததால் முசுலீம்களை விமரிசித்து பேசினான். இருபத்தியொன்னாம் பக்க பார்முலாவில் பதவிகளைப்பெற்ற கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றோர்களின் டி என் ஏ வில் தன்மானம் ஏதும் இல்லை.


T.Senthilsigamani
ஜன 19, 2024 06:30

திக வீரமணி கூட்டம் எங்கே போனவருடம் இதை சனாதன நிகழ்ச்சி ,சமூக நீதிக்கு எதிரானது என கூவோ கூவு என கூவினார்கள் .பட்டணப்பிரவேச நிகழ்வை தடை செய்ய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .எல்லாம் சிறுபான்மை ஓட்டு பிச்சைக்காக .ஓசிசோறு கிடைத்தால் தெருவை மாற்றும் பிச்சைக்கார்களின் இயல்பை அனைவரும் அறிவர் .சோறு போடும் இடமே சொர்க்கம் என வாழும் பிச்சைக்கார்கள் கூட தங்களின் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை .ஆனால் ஓட்டு வங்கிக்காக போலி மதசார்பின்மை கூட்டங்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை போன இரண்டு வருடங்களாக தைமாத முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுங்கள் என கூவிய திராவிட கூட்டங்கள் இந்த வருடம் கப்சிப் .அதுபோல தான் பட்டணப்பிரவேச எதிர்ப்பிலும் கப்சிப்


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜன 19, 2024 06:18

இந்தாண்டு திருவாவடுதுறையில் திக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தடையின்றி வெற்றிகரமாக நடந்த பட்டினிப் பிசவேச நிகழ்ச்சிக்கு முக்கிய காரணம் போன வருடம் இந்த விழாவிற்கு திக திமுகவிசிக போன்ற கட்சிகளால் தடை ஏற்பட்ட போது திருவாடுதுறை ஆதீனத்திற்கு ஆதரவாக மக்களை கூட்டி போராட்டம் நடத்தி திமுக போன்ற அரசியல் கட்சிகளை மிரள வைத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதனால்தான் இந்தமுறை அங்கு பட்டினப் பிரவேசம் எந்த பிரச்சனையுமின்றி வெற்றிகரமாக அமைதியாக நடந்திருக்கிறது இதற்காக இந்துக்கள் அனைவரும் அண்ணாமலைக்கு நம்முடைய நன்றியை தெரிவித்து கொள்வோம்.


Ramesh Sargam
ஜன 19, 2024 00:18

திமுகவினர் எதுவும் சேஷ்டை செய்யவில்லையே??


sankaranarayanan
ஜன 18, 2024 23:36

தடையில்லா பட்டின பிரவேசம் அடிபட்டபின்தான் இந்த திராவிட விடியல் மாடல் அரசு இனி சன்னிதானம் பக்கம் வரவே மாட்டார்கள் சேகர் பாபு இனி சோர்ந்த பாபு ஆகிவிட்டார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை