உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்

திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கல்லாத் தூரிலிருந்து சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற இவர் நிழலுக்காக முன்னூரான் காடுவெட்டி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள மரத்தடி நிழலில் நின்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l24grydb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அங்கே இருந்த ஆறு இளைஞர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிவகுமாரிடம் வம்பு இழுத்துள்ளனர். இதை தனது செல்போனில் சிவக்குமார் வீடியோ எடுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிவக்குமாரை தாக்க துவங்கி உள்ளனர். இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் சாலையிலேயே ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவக்குமார் அங்கே வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் ஏறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார்.https://x.com/annamalai_k/status/1950443976030638254?t=dqj8Kwgfm_VLhL21Cx5j1A&s=09இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கூறி இருப்பதாவது: அரசுப் பஸ்சில் பட்டப்பகலில் வாள்கள் சுழன்றன. திமுக அரசின் கீழ் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான். இன்று, பொது மக்களுக்கு பாதுகாப்பு என்பது ஒரு உத்தரவாதம் அல்ல. மாறாக ஒரு தொலைதூரக் கனவு. திமுக 4 ஆண்டுகளில் தமிழகத்தை மூன்று தசாப்தங்கள் பின்னோக்கி வெற்றிகரமாக இழுத்துச் சென்றுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:19

எங்கேப்பா தவிக விஜய் , போயி அவங்க அப்பா கிட்ட அடுத்து என்ன பேசலாம் என்று டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காரா ? போங்கடா நீங்களும் உங்க மதவெறியும் , கண்டிக்க துப்பில்லை கட்சி ஆரம்பிச்சுட்டானாமே


Kasimani Baskaran
ஜூலை 31, 2025 04:16

நல்ல வேளையாக குடிகாரர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க தீம்க்காவில் ஒரு வைக்கோல் அணி இல்லையே என்று சந்தோசப்பட வேண்டும். [திராவிட]நீதிமன்றத்துடன் சிறப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தினாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 30, 2025 21:33

எல்லாம் பெரிய சார் பார்த்துக்குவாரு ......... அவரு கிட்ட இரும்புக்கரம் இருக்கு ......


சிட்டுக்குருவி
ஜூலை 30, 2025 20:42

அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் .இந்த திராவிட ஆட்சி ஆரம்பத்திலிருந்து இதுவரையும் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள். சாராய கொலைகள் ,சாராயத்தினால் அருந்த தாழிகள், கைவிடப்பட்ட இளஞ்சர்கள் படிப்பு நிறுத்தபட்ட இலான்சிறுசுகள் ,பெண்வன்கொடுமை சம்பவங்கள் ,மந்திரிகளால் அடிக்கபட்டகொள்ளைகள் எல்லாவற்றையும் ஒரு பெரிய குறும்படமாக எடுக்க வழிவகை செய்யவேண்டும் .சினிமாவாக அல்ல .உண்மைநிகழ்வுகள் ,உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அதில் இடம்பெறவேண்டும். .பாதிக்கபடாவர்களுக்கு நிவாரணம் செய்ய அவர்களின் தேவை என்ன என்பதையும் அறிந்து ஒரு தொடரபை ஏறபடுத்தினால் இரக்கம் உள்ளவர்கள் சிறிதளவேனும் உதவிட முடியும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு படிப்பைக்கு உதவிடவேண்டும் என்றால் அதை வெகுதூரத்தில் இருந்தும் செய்யமுடியும். அதை செய்வீரா ?


தமிழ்வேள்
ஜூலை 30, 2025 20:14

சிம்பிள் தீர்வு..மதுக்கடை உற்பத்தி சாலைகள முற்றாக மூடப்பட வேண்டும்.கள்ள சாராயம் விற்றால் காய்ச்சினால் உடனடி மரண தண்டனை... குடித்து செத்தால் செத்தவன் உடலை அரசு தானே எந்த சடங்கு உறவினர்கள் பங்கேற்பு இன்றி எரித்துவிட வேண்டும்.. நோ மோர் நிவாரணம்....குடிநோயாளி செத்தால் அது அவன் செய்த வினையும் தவறும்.. இப்படி நடந்தால் மதுபோதை குற்றம் அறவே இருக்காது..


Ramesh Sargam
ஜூலை 30, 2025 19:40

என்னதான் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை, அட்டூழியங்களை, அக்கிரமங்களை, அரஜாகங்களை வீடியோ பதிவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினால் கூட, கடைசியில் தேர்தலுக்கு முன்பு அந்த திருட்டு திமுகவினர் கொடுக்கும் இலவசங்களை பெற்றுக்கொண்டு மீண்டும் திமுகவையே ஆட்சியில் அமர்த்துவார்கள். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.


Vel1954 Palani
ஜூலை 30, 2025 18:48

டாஸ்மாக் அடிமை கூமுட்டைங்களுக்கு வீட்டுக்கும் தெருக்கும் சாலைக்கும் வித்தியாசம் கூட தெரியலை. எதுக்கும் எதுக்கோ முடிச்சு போட்ட மாதிரி.


பாரத புதல்வன்
ஜூலை 30, 2025 18:40

தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்ற செயல்களுக்கும் காரணம் சாரயக்கடைகள் மற்றும் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக அணைத்து பகுதிகளிலும் நடப்பது தான், இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசு.....முட்டு கொடுப்பது 200 ஓவாய் கொத்தடிமைகள் தான்.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 18:37

ரவுடிகள் சற்றும் அச்சமின்றி உலாவல். தி.மு.க கவுன்சிலர் வீட்டுப் பிள்ளை இளைஞனை கார் ஏற்றிக் கொன்று மகிழ்கிறார். போலீஸ் எஸ் ஐ யே கொலை. தினம் டஜன் பாலியல் சம்பவங்கள். கவர்னர் மாளிகை மீதே குண்டு வீச்சு. அமைச்சரே கல்வீசி தாக்குதல் நடத்தினார். ஆக ஆக..எந்தக் கொம்பனாலும் குறைகூற முடியாத அமைதிப் பூங்கா ஆட்சி இது.


raj82
ஜூலை 30, 2025 18:36

Annamali sir dont waste time here to oppose DMK tn is planning to vote for DMK b team. Just take rest take care of family. The choice of TN is always known well.idiots are idiots. Tarmac will rule