உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 12) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

தீயணைப்பு வீரர் கைதுதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா, 32. ஆரணி தீயணைப்பு நிலைய வீரர். இவர் 8ம் வகுப்பு மாணவிக்கு 'வாட்ஸாப்'பில் பாலியல் தகவல் அனுப்பினார். மாணவியின் தாய் புகாரின்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார், ராஜேஷ்கண்ணாவை போக்சோவில் கைது செய்தனர்.முதியவர் சிக்கினார்வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி, 63. இவர், 5 வயது சிறுமிக்கு, சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணியை போக்சோவில் கைது செய்தனர்.மருத்துவமனை நிர்வாகி தலைமறைவுதிருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் ஜாவித் என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு, பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவியிடம் ஜாவித், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் புகார் படி, தலைமறைவான ஜாவித்தை போலீசார் தேடி வருகின்றனர்.மளிகைக்கடைக்காரர் மீது வழக்குதுாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு, கடந்த 4ம் தேதி சென்றார். மளிகை கடையின் உரிமையாளர் அமுல்ராஜ், 55, என்பவர், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 10ம் தேதி மாணவி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அமுல்ராஜின் நண்பர் முத்துக்குமார், 56, என்பவர் மாணவிக்கு ஆபாச சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. மாணவி கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அமுல்ராஜ், முத்துக்குமார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்கோவை, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 33. இவர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டு இரண்டு குழந்தையை கொஞ்சுவது போல், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். குழந்தையின் பெற்றோர், அவரை கண்டித்தனர். கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். செல்வகுமார் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Svs Yaadum oore
ஏப் 13, 2025 11:57

தினம் தினம் போஸ்கொ சட்டத்தில் கைது செய்வது மக்கள் விடியல் ஆட்சியின் மீது வைக்கும் நம்பிக்கையாம்.. இந்த போஸ்கொ சட்டத்தில் கைது செய்து பிறகு தண்டிக்கப்பட்டவர் எத்தனை சதம்?? ...பெயில் வாங்கி வெளியில் வந்து மீண்டும் அதே போஸ்கோவில் உள்ளே போறான்... இந்த போஸ்கொ வில் கைது செய்யப்படுவது பல அரசு பள்ளி ஆசிரியர்கள் ...இந்த ஆசிரியர் பதவிக்கு முதலில் இந்த ஆசிரியர்கள் எப்படி தேர்வானார்கள் ??.....எல்லாம் திராவிட லஞ்ச ஊழல் ....ஊரெங்கும் கஞ்சா கள்ள சாராயம் டாஸ்மாக் போதை ...இந்த போஸ்கொ குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதை அதுதான் காரணம் ...


Ramesh Sargam
ஏப் 13, 2025 09:23

இந்த செய்தியை நாளிதழ்களின் முதல் பக்கத்தில், கருப்பு எழுத்துக்களில் பக்கத்தின் மேல் பகுதியில் பாக்ஸ் செய்தியாக வெளியிட்டு, திமுக அரசின் அவலத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.


Pandianpillai Pandi
ஏப் 13, 2025 11:07

இது தி மு க விற்கு அவளமல்ல. தி மு க மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நம்பிக்கையில் மக்கள் புகார் அளிப்பதற்கு தற்போது முன்வருகிறார்கள் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். சட்டப்படி நடக்கும் மக்களுக்கு சமுதாயமக்கள் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்து காட்டவேண்டும்.


Ray
ஏப் 13, 2025 09:02

இறைவன் மனிதனைப் படைக்கும்போதே இந்த துன்மார்க்கர்களையும் படைத்து விட்டது சோகம்.


Svs Yaadum oore
ஏப் 13, 2025 08:04

இன்றைய போஸ்கொ வழக்கு கைது ....தீயணைப்பு வீரர் கைது , முதியவர் சிக்கினார், மளிகைக்கடைக்காரர் மீது வழக்கு, பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்....இவ்வளவு கேவலமான நிலைமையில் விடியல் ஆட்சி நடக்குது ...ஆனால் அமைதியான மாநிலம் என்பதால் தான், அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறதாம் ....இப்படிக்கு விடியல் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை