வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தினம் தினம் என்று போடுகிறீர்கள். அப்படியே வார கணக்கு, மாத கணக்கு என்று போட்டால் கூட நல்ல இருக்கும்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 22) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.டெய்லருக்கு 22 ஆண்டு சிறை
திருப்பத்துார், காந்தி நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 31; டெய்லர். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உறவினரின் மகளான, 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பமானார். 2021 ஜூன் 28ல், திருப்பத்துார் போலீசார், போக்சோவில் மஞ்சுநாதனை கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மீனாகுமாரி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். பலாத்காரம் செய்த மஞ்சுநாதனுக்கு, 20 ஆண்டு சிறை, கடத்தியதற்காக, 2 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார்.சில்மிஷ முதியவருக்கு சிறை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாப்பாஊரணியைச் சேர்ந்தவர் முத்துமுனியாண்டி, 72; ஜோதிடரான இவர், 2024 ஜனவரியில், 7 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, காரைக்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், முத்துமுனியாண்டிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
தினம் தினம் என்று போடுகிறீர்கள். அப்படியே வார கணக்கு, மாத கணக்கு என்று போட்டால் கூட நல்ல இருக்கும்.