உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 22) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

பா.ஜ., நிர்வாகி சிக்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் எழில்இசை, 24; பா.ஜ., நகர இளைஞரணி துணைத்தலைவர். இவர், கராத்தே பயிற்சியும் அளித்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன், இவர் பயிற்சி அளித்த மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. போலீசார் சந்தேகத்தின்படி, எழில்இசையின் டி.என்.ஏ.,வை பரிசோதனைக்கு அனுப்பியதில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் எழில்இசை என, தெரிந்தது. அவரை போக்சோவில், போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கடத்தியவர் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். ஏப்., 3ம் தேதி, கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் முசிறி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாயமான சிறுமியை தேடினர். இந்நிலையில், முசிறி அருகே அழிஞ்சிக்குத்துபள்ளத்தை சேர்ந்த விஜயகுமார், 25, ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கடத்தி, சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு, விஜயகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.

முதியவர் மீது 'போக்சோ'

பெருமாநல்லுார், படையப்பா நகரை சேர்ந்தவர் சர்தார் சேட், 64. இவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து சிறுமியை மீட்டனர். பெருமாநல்லுார் போலீசார் அளித்த தகவலின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சர்தார் சேட்டை 'போக்சோ'வின் கீழ் கைது செய்தனர். அதன்பின், ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சர்தார் சேட், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைக்கப்பட்டார்.

பா.ஜ., நிர்வாகி கைது

திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி அதனை படம் எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினர். மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் ராஜ் குமாரை கைது செய்தனர். ராஜ்குமார் வேனில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.

சிறுமிக்கு தொந்தரவு

நிலக்கோட்டை அடுத்த விருவீடு தெற்கு வலையப்பட்டியை சேர்ந்தவர் நிதிஷ் 20. அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். விருவீடு போலீசார் நிதிஷை போக்சோவில் கைது செய்தனர்.இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நிதிஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை , ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். அரசு வக்கீலாக ஜோதி வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SJRR
மே 23, 2025 14:47

குழந்தை பிறக்கும் வரை அந்த மாணவியின் பெற்றோர்கள் போலீசுக்கு தெரிவிக்கவில்லையா? ஒன்பது மாதமாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?


Narayanan Muthu
மே 23, 2025 11:21

போக்ஸோவுக்கும் பிஜேபிக்கும் எப்பவுமே ஒரு நெருங்கிய பந்தம் போல. இதுவரை வெளியில் தெரிந்ததை விட தெரியாமல் இருக்கும் நிகழ்வுகள் நிறையவே இருக்கும்.


M.S Balamurugan
மே 23, 2025 10:46

பிஜேபி ஆளுங்க நெறைய பேர் போக்ஸோ ல சிக்கி இருக்காங்கன்னு... அப்புறமும் ஏண்டா ஆளுங்கட்சியை சொல்றிங்க..


shyamnats
மே 23, 2025 08:44

சிந்துபாத் கதை தினமும் தொடராக நீண்ட காலம் தந்தியில் வருவது போல, போக்ஸோ நிகழ்வுகளும் தினமும் பதிய படுகின்றன. ஆட்சியாளர்கள் முழிக்க மாட்டார்களா? சிங்கப்பூர் போல, அமைதி பூங்கா என்று மார் தட்டுவது தினமும் தொடர்கிறது. 2026 லும், மேலும் தொடரும் என்றும் வீர வசனங்கள். மக்கள் சரியாக நிலைமையை உணர்ந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.


Minimole P C
மே 23, 2025 08:02

Entha kombanalum kurai sollamudiyatha Aatchi.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை