உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 20) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூலி தொழிலாளி மீது போக்சோ

கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 49; இவர், 11 வயது மற்றும் 9 வயதுடைய, இரண்டு சிறுமிகளுக்கு கடந்த மே, 24ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமிகளின் தாய் கரூர் ரூரல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கிறார்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது நபர். இவருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தாய், திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது நபரான உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 17ம் தேதி இரவு திடீரென 3 வயது சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால், திண்டிவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி இறந்து விட்டதாக கூறினர். சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக சிறுமியின் தாய், உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரி, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் சுமன் (எ) பிரகாஷ், 38; கட்டுமான தொழிலாளி. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளார்.இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் சுமன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி சுமனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.

வாலிபர் மீது 'போக்சோ'

திருக்கோவிலுார் அடுத்த மொகலார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அய்யப்பன்,19; இவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமி பள்ளி செல்லும் போது நாள்தோறும் பின் தொடர்ந்து அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் திருக்கோவிலுார் பகுதியில் சிறுமியின் சட்டையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்று, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து அய்யப்பனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
ஜூன் 22, 2025 21:51

Atleast 50% Cases are FALSE & Cookedup by Selfishly Vested Case-News


Lion Drsekar
ஜூன் 21, 2025 09:36

இன்றைக்கு எல்லாமே முழுநேர தொழிலாக மாறிவிட்டது, வேலைக்கு முன் அனுபவம் போல் சமூக சீரழிவுக்கு முன்னனுபவம் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிலடங்கா நிலையில் வளர்ந்து கொண்டே செல்கிறது, இவர்களால் அரசாங்கத்தில் இவர்களுக்காகவே பணிபுரிய வேலைவாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகிறது, வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை