உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம்திருப்பத்துார் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த சந்தோஷ், 25, மற்றும் அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் ஆகியோர், ஜூன் 26ம் தேதி இரவு, 7:00 மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பிய, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.ஜோலார்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று போக்சோ வழக்கில் சந்தோஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைதிருவண்ணாமலை மாவட்டம், மடிப்பாக்கத்தை சேர்ந்த தொழிலாளி சக்திகுமார், 29, கடந்த 2023 ஜூன், 2ல், 9 வயது சிறுமியை கடைக்கு பைக்கில் அழைத்து சென்று, பாலியல் சில்மிஷம் செய்தார். செய்யாறு மகளிர் போலீசார் விசாரித்து, சக்திகுமாரை கைது செய்தனர்.திருவண்ணாமலை ஒருங்கிணைந்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா விசாரித்து, நேற்று முன்தினம் மாலை, சக்திகுமாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.காமுக தந்தைக்கு காப்புதென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கிராமத்தை சேர்ந்த, 45 வயது விவசாயிக்கு, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 17 வயதாகும் இரண்டாவது மகளுக்கு வாய் பேச முடியாது.அவரது தந்தை, மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வயிற்று வலி ஏற்பட்டதால், பாட்டியுடன் அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்ற போது, பரிசோதனையில் அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 05, 2025 16:46

நிகழ்வுகள் நடந்தேறிப் பல மாதங்கள், வருஷங்கள் கூட ஆகிவிட்டது அவற்றின் தீர்ப்புகள் இன்றுதான் வெளிவருகின்றன என்றால் பின்புலத்தில் எத்தனை குடும்பபிகளுக்கு மிரட்டல்கள், அவமானங்கள் ஏற்படுத்தியிருப்பார்கள் இத்தனையையும் தாண்டி தண்டனை வரை சென்றதே சாதனையெனலாம்


Nada Rajan
ஜூலை 05, 2025 10:22

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் அடிக்கடி நடந்து வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை