உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பலாத்கார வழக்குகளில் நேற்று கைதானவர்கள்!

பலாத்கார வழக்குகளில் நேற்று கைதானவர்கள்!

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய போக்சோhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l49nfd9p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சியில் ஆசிரியர்; புதுக்கோட்டையில் ஏ.ஹெச்.எம்., கைதுதிருச்சி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும், புதுக்கோட்டை அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஒருவரும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவிய ஆசிரியர் கைது

கோவையில் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்த புகாரில் ஓவிய ஆசிரியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர் கைது

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இயங்கி வரும் அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஞானப்பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர், கூட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஆத்துார் மகளிர் போலீசார், 3 மாணவர்கள் மீதும், 'போக்சோ' வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

16 வயது மாணவன் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஏ.ஹெச்.எம்., சிக்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகாரின் படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

16 வயது மாணவன் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சிறுமி கர்ப்பம்

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நபருடன் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமானார். சிறுமியின் தாய், கடந்தாண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.இந்நிலையில், ஏழு மாத கர்ப்பமான சிறுமியை, சிகிச்சைக்காக எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் 17 வயது சிறுமி என தெரிந்தநிலையில், அதிகாரி அளித்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Karthikeyan Palanisamy
பிப் 20, 2025 01:08

இதுக்கெல்லாம் காரணம் யார்? உங்க தந்தை ஈவேரா தான். உனக்கு வேண்டுமானால் யாராக இருந்தாலும் உன் ஆசையை தீர்த்து கொள் உனது தேவைதான் முக்கியம் என சொன்னது யார்.


Sri
பிப் 20, 2025 00:33

தண்டனை கடினமானால் தவறுகள் தடுக்கப்படும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 19, 2025 21:35

"தனி நபர் தவறுகளுக்கெல்லாம் ஆளும்கட்சியையும் ஆளும் கட்சி தலைவரின் சாதியை வசை பாடினார்களா su. viswanathan?? எந்த தனி நபர் குற்றத்துக்கு யாருடைய சாதி யை திமுக வசை பாடியது?? ஒரே ஒரு incident சொல்லுங்க பார்க்கலாம்?? 13 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் தனி நபரா?? சாத்தான்குளத்தில் வசித்து வந்த தந்தை, மகனைக் கொன்றது தனி நபரா? பொள்ளாச்சியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த 12 அதிமுக நிர்வாகிகள் தனி நபரா? இப்போதைய ஆட்சியில் குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் கண்டுபிக்கப்பட்டு கைது செய்யப் படுகிறார்கள். திறமையான காவல் துறை க்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க மனமில்லை யா உங்களுக்கு??/


பேசும் தமிழன்
பிப் 19, 2025 18:50

நேற்று.... இன்று..... நாளை..... எ‌ன்று.... வானிலை செய்தி போல் ஆகி விட்டது..... விடியாத ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்கள்.


venugopal s
பிப் 19, 2025 17:30

தமிழக அரசும் காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நன்றாக செயல்படுகிறது என்பதை தான் இதன் மூலம் அறியமுடிகிறது.


பேசும் தமிழன்
பிப் 19, 2025 18:57

என்ன தான் மக்கள் அனைவருக்கும் வார்த்தையால் அடித்து துவைத்தாலும்..... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி என்னம்மா முட்டு கொடுக்கிறார்.... பாருங்கள்.


M Ramachandran
பிப் 19, 2025 17:28

அப்பாவின் ஆட்சியில் எல்லாம் தப்பாவே நடக்குது. டோப்பாவின் ஆட்சியில் எல்லாம் டெய்லி ஸ்கொர் படு வேகமாக ஏறுது. கேட்டால் ஏமாரா சொன்னது நானா என்பார்கள். பெண்கள் காலை 8:00 மணிமுதல் மதியம் 1:00 மணிக்குள் முழுமையாக வீடு திரும்பினார்களா என்று ஒரு அறிவிப்பு பலகையில் தினப்படி எழுத வேண்டும். எருமைய்ய மாட்டின் மேல் மழை யாக நித்தம் நித்தம் அது பாட்டுக்கு நடக்கது. யேனெனில் காவல் துறை கீழிருந்து மேலாக ஒவ்வொரு அதிகாரியாக செய்தி அனுப்பி கடைய்யசியில் சம்பந்த பட்ட காவல் துறைய்ய அமைச்சரின் செயலாளர் காதுக்கு போய் சேர பிறகு அந்த அமைச்சரின் மூடு பார்த்து அவர்குடும்ப பாங்க்கு தெரிந்து பிறகு பவ்யமாக செய்தியாய் தெரிவிப்பார். இதைய விட முக்கிய எய்தி ஏதேனும் உண்டா என்று ஆராய்ந்து ஒரு சட்டம் ஜாலராக்கள் முன்னிநிலையில் சட்ட வடிவாகி ஏகோபித்த ஒப்புதலுடன் மரண தணடனை என்று சட்டம் இயற்ற படும். பிறகு விளக்கம் கேட்டு பல நிலையில்பல சந்தேககஙகள் உற்பத்தியாக்கி சட்ட வடிவு கிடப்பில் போடப்படும். அப்பா இருக்க பய மேன். அப்பாவின் பிள்ளைகள் பொறுப்பாக மாட்டார்கள்


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 19, 2025 14:33

இதெல்லாம் ஒருநாளில் நடந்ததா?. வாழ்க தீயமுக வாழ்க அப்பா


Yes your honor
பிப் 19, 2025 14:04

நம் கர்மா நம்மைத்தானே சுடும், நாம் தானே இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தோம். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் நாம் அளித்துள்ள ஒட்டிற்கே பொறுப்புண்டு.


Oru Indiyan
பிப் 19, 2025 14:01

அப்பாவின் ஆட்சியில் எல்லாம் தப்பாவே நடக்குது.


Kasimani Baskaran
பிப் 19, 2025 13:34

செய்திக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பு இல்லை.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 19, 2025 16:03

நன்றாக இன்னொரு முறை சொல்லுங்க சார். முறை தவறி, மதி இழந்து, ஈனப் பிறவிகள் போல மாறி, பெண்களைத் துன்புறுத்தும் கயவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எப்படி என்ன தொடர்பு இருக்க முடியும். செய்தியில் உள்ளவற்றில் பாருங்கள். Snapchat மூலம் தொடர்பு ஏற்பட்டு, அந்த பையன் கூப்பிட்டதும் Sunday அவனோட ரூமுக்குப் போயிருக்கிறாள். அவனும் கூட்டாளிகளும் சிதைத்து விட்டார்கள். இதுக்கு அரசு என்ன செய்ய இயலும்?? ஆனால், புகார் கிடைத்த உடன் அத்தனை கயவர்களையும் கைது செய்த காவல் துறை சூப்பர்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 16:44

திரு. வைகுண்டேஸ்வரன் அவர்களே , இதே நிலைப்பாட்டை நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எடுப்பதில்லையே. உங்கள் பத்திரிக்கையிலும் உங்கள் தொலைக்காட்சியிலும் தனி நபர் தவறுகளுக்கெல்லாம் ஆளும்கட்சியையும் ஆளும் கட்சி தலைவரின் சாதியையும்தானே வசை பாடினீர்கள்.


புதிய வீடியோ