வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதிகமாக வழி பறி செய்பவர்கள் காவல் துறை தானே.
இதைப் போல எல்லாம் அமெரிக்காவில் இங்கிலாந்தில் செய்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும் அதெல்லாம் உருப்படும் நாடு
சென்னை: 'டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் அளிக்க, காலை, 11:00 மணிக்குள் வர வேண்டும்' என, கெடுபிடி காட்டுவதால், வெளி மாவட்டங்களில் இருந்து சற்று தாமதமாக வருவோர், புகார் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டி உள்ளது. சென்னையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில், காலை, 10:00 மணியில் இருந்து, பகல் 12:00 மணி வரை, புகார் அளிக்க வருவோரிடம், அதிகாரிகள் மனுக்கள் பெறுகின்றனர். போலீஸ் நிலையங்களில் நடவடிக்கை எடுக்காததால், ஏமாற்றம் அடைவோர், மாநிலம் முழுதும் இருந்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு கொடுக்க வருகின்றனர். ஆனால், பலர் பஸ், ரயில் தாமதம், போக்கு வரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், குறித்த நேரத்திற்குள் வர முடிவதில்லை. பகல் 12:00 மணிக்கு பின், சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், டி.ஜி.பி., அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அலுவலகம் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை. சர்வ சாதாரணமாக, நாளை வாருங்கள் என்கின்றனர். சென்னையில் இரவு தங்கும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை என்றாலும் கேட்பதில்லை. இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னை வந்தும், புகார் மனு கொடுக்க முடியாமல், திரும்பி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, காலை, மாலை என, இரண்டு வேளையும், டி.ஜி.பி., அலுவலகத்தில், மனுக்கள் பெற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகமாக வழி பறி செய்பவர்கள் காவல் துறை தானே.
இதைப் போல எல்லாம் அமெரிக்காவில் இங்கிலாந்தில் செய்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும் அதெல்லாம் உருப்படும் நாடு