மேலும் செய்திகள்
ஜோய் ஆலுக்காஸ் தி சீசன் ஆப் கிப்டிங்
1 minutes ago
காசி, கயா, ஆக்ரா சுற்றுலா ஆன்மிக ரயில் அறிவிப்பு
3 minutes ago
சென்னை: “தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுக்கு, செம்மொழி விருது கிடைக்காதது விரக்தி அளிக்கிறது,” என, ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆறு.அழகப்பன் கூறினார். அண்ணாமலை பல்கலையின் தமிழ்த் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவர் ஆறு.அழகப்பன். தமிழ்த்தாய்க்கு சிலை, ரிஷிகேஷில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க உழைத்தவர். 'நாடகக்கலை' எனும் இதழை நடத்தி, நாடக ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர். ம.பொ.சி.,யின், 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, மு.கருணாநிதியின், 'குறளோவியம்' நுால்களை மொழிபெயர்த்து வெளியிட்டவர். வாரணாசியில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் என்ற பெருமைகளுடன், 'தமிழ்ச்சுரங்கம்' அமைப்பின் வாயிலாக, தமிழுக்கு தொண்டு செய்வோருக்கு, 'தமிழ் மாமணி' பட்டம் வழங்கி கவுரவிக்கிறார். இவர், 25க்கும் மேற்பட்ட நுால்களையும் எழுதி உள்ளார். இவற்றைவிட முக்கியமாக, 2000ம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழ் மொழியைப் பற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்து, 'குளோரி ஆப் தமிழ்' என்ற நுாலாக்கி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அனைத்து எம்.பி.,க்களுக்கும் வழங்கினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்நிலையில், தனக்கு செம்மொழி விருது கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக கூறினார். அவர் கூறியதாவது: கடந்த 2000ம் ஆண்டு முதல், நான், சுந்தர்ராஜன், வா.மு.சேதுராமன் ஆகி யோர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 100 தமிழறிஞர்களை இணைத்து, டில்லியில் கருத்தரங்கங்கள், மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்தியதுடன், தொடர்ச்சியாக போராட்டங்களையும் நடத்தினோம். ஆனால், எங்களில் யாருக்கும் இதுவரை செம் மொழி விருது கிடைக்க வில்லை. என் நண்பர்கள், செம்மொழி விருது கிடைக்காத விரக்தியிலேயே இறந்து விட்டனர். தற்போது வரை, என் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற விரக்தி எனக்கும் ஏற்பட்டுள்ளது. இதை, அரசும், விருது குழுவும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
1 minutes ago
3 minutes ago