வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கரண்ட் கணேசன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்
சேலம்: டூவிலரில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பட்டாசு மூட்டையை டூவிலரில் கொண்டு சென்றனர். வழியில், குப்பை எரிந்து கொண்டு இருந்தது.அந்த வழியாக சென்ற டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து அதில் விழுந்தது. இதில் பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறின்.இச்சம்பவத்தில், கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேட்டை சேர்ந்த செல்வராஜ்(29) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தங்கராஜ் என்பவரது மகன் லோகேஷ் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரண்ட் கணேசன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்