உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், அரசூர் பகுதியில் மலட்டாற்றில் மூன்று பேர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.அரசூரைச் சேர்ந்த அபிநயா,15, சிவசங்கிரி,20, தட்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்,15, ஆகிய 3 பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் அபிநயா, சிவசங்கிரி ஆகிய இருவர் சகோதரிகள் ஆவர். ஆற்றில் குளிக்க சென்றபோது 3 பேர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

seshadri
மே 21, 2025 15:53

ஆறு இருப்பதால்தானே ஆற்றில் மூழ்கி இறக்கிறார்கள். ஆறே இல்லாமல் செய்வதற்கு என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற இதை வக்குறைதியாக கொடுக்கலாம்.


Raja k
மே 21, 2025 15:16

திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலத்தால் மூன்று உயிர்களை பறிகொடுத்துள்ளோம், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டி இருக்குமோ,? இதற்கெல்லாம் முடிவு கட்ட 2026 தமிழகத்தில் அமித்ஷாவின் தாமரை கூட்டணி மலர வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை