வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எப்படியும் ஒரு....உறுப்பினர்....கார்டு இருக்கும்,,..
பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று விழிப்புடன் பார்க்கவேண்டும். இல்லையென்றல் நமக்கும் ஆபத்துதான்.
திருப்பூர்:திருப்பூரில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள் வெடித்ததில், ஒன்பது மாத குழந்தை உட்பட, மூன்று பேர் இறந்தனர். விபத்தில், மளிகை கடை உள்ளிட்ட, 40 வீடுகள் சேதமடைந்தன.திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் அருகே பொன்னம்மாள் நகர், சத்யா காலனியில் உள்ள வீட்டில் நேற்று காலை, 11:45 மணிக்கு பலத்த வெடி சத்தம் கேட்டது. உடல் பாகங்கள்
அந்த வீட்டின் முன் இருந்த மளிகை கடை, அக்கம்பக்கத்தில் காம்பவுண்ட் ஓட்டு வீடுகள் உள்ளிட்ட, 40 வீடுகள் நொறுங்கின. தகவலறிந்து வந்த வடக்கு துணை கமிஷனர் சுஜாதா தலைமையில், மாநகர போலீசார் விரைந்தனர். காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என நினைத்து, போலீசார் இடிபாடுகளுக்கு இடையே சென்று பார்த்தபோது, திருவிழாவில் வாண வேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான வெடிகள் சிதறி கிடந்தன.இந்த கோர வெடி விபத்தில், 30 - 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பெண்ணின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு சில மீட்டர் தள்ளி கிடந்தது.இந்த பயங்கர வெடி விபத்தில், பக்கத்து வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த, ஒன்பது மாத குழந்தை ஆலியா செரின், கட்டட இடிபாடுகள் விழுந்ததில் இறந்தது. அதேபோல, விபத்து நடந்தபோது, அப்பகுதியில் நடந்து சென்ற குமார், 37, என்பவரும் இறந்து கிடந்தார். சடலங்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு அனுமதி
இந்த பயங்கர வெடி விபத்தில், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அந்த வழியாக சென்ற நபர்கள், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த முதியவர் என, 15 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரது நிலை மோசமாக உள்ளது. போலீசார் கூறியதாவது:வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில், கார்த்திகேயன், 44, அவரது மனைவி சத்யபிரியா, 40, வசிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; இன்ஜி., படிக்கின்றனர். தரைதளத்தில் கார்த்திகேயன் குடும்பத்தினர் உள்ளனர்.சத்யபிரியாவின் அண்ணன் ஈரோடு, நம்பியூரை சேர்ந்த சரவணக்குமார், 42, என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக சட்ட விரோதமாக, திருப்பூரில் உள்ள தன் தங்கை வீட்டில் வைத்து வெடி தயாரித்து வந்தார். அப்போதுதான், நேற்று வெடி விபத்து ஏற்பட்டது.இவ்வாறு போலீசார் கூறினர். குடியிருப்புகள்
பலத்த வெடி விபத்தில் தொடர்புடையவர் வீடு உட்பட அக்கம்பக்கத்தில் இருந்த 40 வீடுகள் சேதமடைந்தன. மாலை, 4:30 மணிக்கு வீட்டில் இருந்து, 125 கிலோ வெடி மருந்துகளை மூட்டை மூட்டையாக, போலீசார் வேனில் ஏற்றினர்.சுற்றியும் குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த பலத்த வெடி விபத்தின் கோரத்தன்மையை கண்டு மக்கள் மீள முடியாமல் உள்ளனர். வெடி விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள், 300 மீட்டர் துாரத்தில் விழுந்து கிடந்தன. அவற்றை போலீசார் மீட்டனர்.
எப்படியும் ஒரு....உறுப்பினர்....கார்டு இருக்கும்,,..
பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று விழிப்புடன் பார்க்கவேண்டும். இல்லையென்றல் நமக்கும் ஆபத்துதான்.